ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரிய பகவான். சூரியன் சக்தி, மரியாதை, தந்தை, உயர் பதவி, அதிகாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவான் செப்டம்பர் மாதத்தில் தனது ராசியை மாற்றியுள்ள நிலையில், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இதன் தாக்கம் காணப்படும்.
சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆன நிலையில், மேஷ ராசியில் ராகு உள்ள நிலையில், இந்த இரு கிரகங்களின் இந்த நிலையினால், ஷடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது. ஷடாஷ்டக யோகத்தால் மக்கள் துக்கம், நோய், கடன், கவலை, துரதிர்ஷ்டம் மற்றும் துன்பங்களை சந்திக்க நேரிடும். ராகு மற்றும் சூரியனின் உறவால், நாட்டில் முக்கிய நபரின் மரணம் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். அதோடு வெள்ளம், பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ரிஷபம் - இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் வலி மிகுந்ததாக இருக்கும். இந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுத்தால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே சமயம் இந்த ராசிக்காரர்களுக்கு மனநல பிரச்சனைகளும் அதிகரிக்கலாம்.
மிதுனம் - ஷடாஷ்டக யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலம் மற்றும் மனநலக் கோளாறுகளை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். எனவே இந்த காலகட்டத்தில்கவனமாக இருங்கள்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறன் இந்தக் காலகட்டத்தில் பாதிக்கப்படலாம். பேச்சு வார்த்தையில் கவனம் தேவை. இதனால் நிதிநிலை மற்றும் தொழில் இரண்டும் பாதிக்கலாம். எனவே, பாதகமான சூழ்நிலைகளில் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
மகரம் - ஷடாஷ்டக யோகத்தால் அலுவலகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களுடனான உறவுகள் மோசமடையலாம். மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே கவனமாக இருங்கள்.
கும்பம்: செலவுகள் உங்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கும். எனவே உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருங்கள். அதே நேரத்தில், திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)