கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பதட்டம் காரணமாக இந்நாட்களில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை ஒரு அமைதியான கொலையாளி என்றே கூறலாம். இது மெதுவாக தன் நாச வேலையை செய்து கொண்டிருக்கும். இந்த நோயில், இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் மிக வேகமாக நடக்கத் தொடங்குகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு சோர்வு, மார்பு வலி, தலையில் கடுமையான வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்படும்.
கொரோனா காலத்தில், இந்த சிக்கல் மேலும் அதிகரிக்கக்கூடும். கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. இத்தகைய நோயாளிகள் தங்கள் உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இதய நோய் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸால் அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் காரணமாக இதய நோயாளிகள் அதிகம் இறக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் இதயம் மற்றும் இரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
நீங்கள் உட்கொள்ளும் உங்கள் உணவு மற்றும் பானங்கள் மூலம் உயர் இரத்த அழுத்த பிரச்சினையை நீங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு DASH உணவைப் பின்பற்ற பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர, உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் உடலில் அதிக நீர் இருப்பை தக்கவைத்துக்கொள்வதும் மிகவும் அவசியமாகும்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக, மக்களின் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், உங்கள் மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டியது மிக அவசியமாகும். இதற்காக, நீங்கள் யோகா, தியானம் மற்றும் நறுமண சிகிச்சை (Aroma Therapy) போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், உங்கள் மருத்துவர் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தத்துக்கான மருந்துகளை வழங்கியிருந்தால், உங்கள் மருத்துவர் ஆலோசனை வழங்கும் வரை அதை நிறுத்தி விடாதீர்கள். அப்படி செய்தால் இரத்த அழுத்தம் நிலையற்று மேலும் கீழுமாக மாறுபடும். இதன் காரணமாக உங்களுக்கு பலவித பிரச்சனைகள் ஏற்படலாம்.
நீங்கள் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். உங்கள் ஆரோக்கியமற்ற பழக்கம் உங்கள் இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம் ஆகியவற்றை பாதிக்ககூடும்.
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்களது உடல் எடை அதிகமாக இருந்தால், உங்கள் மொத்த உடல் எடையில் 10 சதவீதத்தை குறைத்து உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.