30 ஆண்டுக்குப் பிறகு கும்பத்தில் சனிப்பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்

Saturn Transit in Aquarius After 30 Years: வேத ஜோதிட சாஸ்திரத்தில் சனி கிரகத்தை மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. எனவே வருகிற ஜனவரி 17, 2023 அன்று, சுமார் 3 தசாப்தங்களுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இதன் போது 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே காண்போம்.

1 /4

கடக ராசி: வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டும். கடனாக கொடுக்கப்பட்ட பணம் சிக்கிக்கொள்ளலாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும்.  

2 /4

சிம்ம ராசி: திருமண வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக மனக்கசப்பு ஏற்படும். மனைவியின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும்.  

3 /4

விருச்சிக ராசி: மன உளைச்சல் ஏற்படும். தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சொத்து வாங்கும் விஷயத்தில் உங்கள் பணம் சிக்கிக்கொள்ளலாம், எனவே நண்பர்களை நம்ப வேண்டாம்.   

4 /4

மீன ராசி: இந்த சனிப் பெயர்ச்சியால் வீண் செலவுகள் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளலாம். அதிகப்படியான பணச் செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். சோர்வாக உணரலாம்.