லைப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கும் போது இந்த 5 தவறுகளை செய்யாதீங்க - வாழ்க்கையே போயிரும்

Relationship Tips: நீங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரை தேர்வு செய்யும்போது தெரிந்தும் கூட இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள். இதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.

இது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர் பார்த்து முடிவை செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி இந்த தவறுகளை தவிர்ப்பது வாழ்வில் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

 
1 /8

திருமணம் செய்துகொள்வது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான தருணமாகும். ஒருவர் திருமண பந்தத்தில் நுழைவதன் மூலம் வாழ்வின் புதிய அத்தியாத்திற்கு நுழைகிறார் எனலாம்.   

2 /8

அப்படியிருக்க, நீங்கள் வாழ்க்கை துணையை தேர்வுசெய்யும் போது இந்த 5 தவறுகளை செய்யவே செய்யாதீர்கள். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.   

3 /8

எந்த முடிவை எடுக்கும் முன்னரும் அவசரப்படாதீர்கள். அவசரப்பட்டு முடிவெடுப்பது முதல் தவறாகும். அவசரப்படாமல் ஆழ்ந்து சிந்தித்து அந்த நபர் உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறாரா என்பதை யோசித்து, உங்களுக்கு இருக்கும் குழப்பங்களை நிவர்த்தி செய்துகொண்டு சிந்திப்பதற்கு காலம் எடுத்து அந்த முடிவை எடுங்கள்.  

4 /8

அதேபோல் உங்களுக்கு அந்த நபரை தோற்றத்தில் பிடிக்கவில்லை என்றால் - அதாவது, எப்போதும் முகத்தில் பொலிவுவின்றி சோம்பல் காட்டுபவராக இருந்தால் - அவரை தேர்வு செய்யும்முன் சிந்தியுங்கள். உங்களுக்கு தோற்றம் சார்ந்து மனம் ஒவ்வாதபட்சத்தில் எதிர்காலத்தில் இதுகுறித்தும் பிரச்னை வரலாம். 

5 /8

அதேபோல், குடும்பத்தினரின் அழுத்தத்திற்காக யாரையும் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ளாதீர்கள். மாமா மகள், தம்பி மகன் என உறவினர்களின் நிர்பந்தத்தால் திருமணம் செய்துகொள்வதால் வருங்காலத்தில் பிரச்னைகள் ஏராளமாக வரலாம்.  

6 /8

நீங்கள் பார்க்கும் அந்த நபரிடம் போதிய நம்பிக்கை உங்களுக்கு ஏற்படாவிட்டால் திருமணம் செய்துகொள்வதில் அர்த்தமே இல்லை. நம்பிக்கை ஏற்படுவதற்கு காலம் கொடுக்கலாம். அப்போதும் உங்களுக்கு அந்த நபர் மீது நம்பிக்கை வராவிட்டால் நிச்சயம் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்.  

7 /8

உங்களுக்கும் நீங்கள் வாழ்க்கை துணையாக பார்க்கும் அந்த நபருக்கும் பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால் அதுகுறித்து பேசி முடிவெடுத்து அதன்பின் திருமணம் செய்துகொள்ளுங்கள். அதை பற்றி யோசிக்காமல் திருமணம் செய்தால் பிரச்னை வரலாம்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை பொதுவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.