ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?

Mantras For Luck In Saturn Effect: சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்ற வார்த்தைகளை பலமுறை கேட்டிருக்கலாம். அது உண்மை தான், ஏனென்றால், நமது நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் நீதிமான் சனீஸ்வர பகவான் தான்.. ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?

நான் யாருக்குமே தீமை செய்ததே இல்லை என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கலாம். ஆனால், அறிந்தும் அறியாமலும் நமது செயல்கள் பலருக்கு நன்மையாக இருந்தாலும், சிலருக்கு நாமே எதிர்பாராத வகையில் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்கான பலனையும் நாம் தானே அனுபவித்தாக வேண்டும்? அதைத் தவிர, நமது விதியின்படி ஏழரைச் சனி, கண்டகச் சனி, சனி தசை, சனி தோஷம் என பல காரணங்களால் கஷ்டப்படுபவர்களும் உண்டு

1 /9

செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களைக் திருப்பிக் கொடுக்கக் கூடிய சனி பகவானின் கோபப் பார்வை நம்மை கஷ்டப்படுத்தும் என்றால், அதற்கு சில பரிகாரங்களும் உண்டு. அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்

2 /9

கர்மநாயகன் என்று பெயர் பெற சனிபகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் மீது அவரது தாக்கத்தின் கெடுபலன்கள் குறைவாகவே இருக்கும். உங்கள் குடும்பத்தில் அந்த ராசிகளைச் சேர்ந்தவர்கள் இருந்தால், அவர்களுடன் இணக்கமாக இருப்பது நல்லது. மேஷம், துலாம், கும்பம், மகரம் ராசிக்காரர் வாழ்க்கைத் துணையாக இருந்தால் அவர்களிடம் வாக்குவாதம் வேண்டாம்

3 /9

சனிக்கிரக தோஷம் இருப்பவர்கள் மட்டுமல்ல, ஏழரை சனி, சனி தசை என சனியின் ஆதிக்கம் இருக்கும் சமயங்களிலும், திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் சென்று சனீஸ்வரரை வணங்குவதுடன், மூலவரான தர்ப்பாரண்யேசுவரரையும் வணங்கி வருவது நல்லது

4 /9

சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை காலங்களில் பக்த ஆஞ்சநேயரை வழிபடவேண்டும். மாருதியை சேவித்தால் துன்பங்கள் குறையும்

5 /9

"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ" என்ற சனி மூல மந்திர ஜபத்தை சனிக்கிழமைகளில் முடிந்த அளவு சொல்லி வரவும்

6 /9

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே, மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்! சச்சரவின்றிச் சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா!! என்ற மந்திரத்தை சொல்லி வணங்கி வரவும்

7 /9

சனி தசையின்போது ராமாயணத்தின் பாலகாண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.  

8 /9

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசோதயாத்|| என்ற சனி காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் துன்பங்கள் மட்டுப்படும்  

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது