டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய வசதி! பணமில்லாம செலவு செய்ய உதவும் எஸ்பிஐ!

SBI-AIIMS New Delhi Smart Card: எய்ம்ஸ் மருத்துவமனையில் பணமில்லா பரிவர்த்தனைகளுக்காக ஸ்மார்ட் கார்டை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியது

புதிய ஸ்மார்ட் கார்டு புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதியிலும் கட்டம் கட்டமாக வெளியிடப்படும்... இந்த கார்டு வாங்குவதால் நோயாளிகளுக்கு என்ன பயன்?

1 /8

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிய ஸ்மார்ட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த கார்டு, டிசம்பர் 12, 2023இல் எய்ம்ஸ் ஊழியர்கள் உணவகத்தில் அமல்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக இன்று (பிப்ரவரி 12, 2024), தாய் மற்றும் சேய் பிளாக்கில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

2 /8

மருத்துவமனையில் பணமில்லா பரிவர்த்தனைகளுக்காக SBI-AIIMS புது தில்லி ஸ்மார்ட் கார்டை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியது; அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக் கொள்வோம்

3 /8

AIIMS-SBI டிஜிட்டல் நோயாளி பராமரிப்பு அட்டை என்ற ஸ்மார்ட் கார்டை அறிமுகப்படுத்தியது. உணவகம் உட்பட எந்தவொரு சேவைகளுக்கும் AIIMS இல் பணம் செலுத்துவதற்கு இந்த அட்டையை பயன்படுத்தலாம். நோயாளியின் பெயரில் இருக்கும் இந்த அட்டையில் தொகையை டெபாசிட் செய்து, AIIMSல் உள்ள வெவ்வேறு தொகுதிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்    

4 /8

5 /8

6 /8

இந்த ஸ்மார்ட் கார்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினார். "ஒரே நாடு, ஒரே எய்ம்ஸ், ஒரே அட்டை" நோக்கிய முதல் படி இது என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

7 /8

SBI-AIIMS ஸ்மார்ட் கார்டு அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் சேவைக் கட்டணங்கள் ஏதுமில்லை

8 /8

நோயாளி/பணியாளர்க்கு AIIMS  UHID விவரங்களைக் கொடுக்க வேண்டும். UHID வழங்கப்பட்டவுடன், நோயாளி அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அந்த எண்ணைக் கொடுத்தால் SBI-AIIMS ஸ்மார்ட் கார்டு கவுண்டரில் கிடைக்கும். ஸ்மார்ட் கார்டு டாப்-அப் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டதும், வெவ்வேறு கேஷ் கவுண்டர்களில் பணம் செலுத்த பயன்படுத்தலாம்.