சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!

Shani Nakshatra Peyarchi Palangal 2024: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் இவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.

Shani Nakshatra Peyarchi Palangal 2024: சனியின் ஒவ்வொரு அசைவும் மிக முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

சனி அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக உள்ளது.   

2 /8

ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளின் வாழ்வில் சுபிட்சம் பெருகும். பல வித நன்மைகள் நடக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

3 /8

ரிஷபம்: சனியின் நட்சத்திர மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்களை அளிக்கவுள்ளது. தொழில், வியாபாரத்தில் பல நன்மைகள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணி பாராட்டப்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் சாத்தியமாகும். வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

4 /8

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் சாதகமாக இருக்கும். தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த மாற்றம் லாபத்தை அள்ளித் தரும். இந்த காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக லாபம் அடைவது மட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தியும் ஏற்படும். கணவன் மனைவி இடயே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

5 /8

கன்னி: சனி நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு சாதகமாக அமையும். கன்னி ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். 

6 /8

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பெயர்ச்சி சுப பலன்களைத் தந்துள்ளது. சனி பகவானின் அருளால் நிதி நிலை மேம்படும். இதன் விளைவாக, பொருளாதார நிலை மிகவும் வலுவடையும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

7 /8

மீனம்:  மீன ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகமாகும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.