Favourite Zodiac Sign of Lord Shani: சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலன்களை நமக்கு அளிகிறார். இந்த காரணத்தால் அவர் நீதிக்கடவுள் என அழைக்கப்படுகிறார். நம்ம நல்ல செயல்களை செய்தால், நமக்கு அதற்கு ஏற்ற நற்பலன்கள் கிடைக்கும். ஜோதிட கணக்கீடுகளின் படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாவார். இவர் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும்.
சனி அனைவரும் கண்டு அஞ்சும் கிரகமாக உள்ளார். ஆனால் அவர் ஒரு ராசி மீது தனது ஆசியை காட்டத்துவங்கி விட்டால், அவர்களுக்கு அள்ளிக்கொடுப்பார். சனி பகவான் எப்போதும் மிகவும் கருணையுடன் ஆசி வழங்கி அருள் பொழியும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷப ராசிக்காரர்கள் மீது சனி பகவான் எப்போதும் தனி கருணை காட்டுவார். இந்த ராசியின் பாக்ய ஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தானத்தின் அதிபதியாக சனி உள்ளார். இவர்களுக்கு ஏழரை சனி தாக்கம் இருந்தாலும், அதிக பிரச்சனை இருக்காது.
கடக ராசிக்காரர்கள் மீதும் எப்போதும் சனி பகவானின் தீய பார்வை படுவதில்லை. ஆனால், ஏழரை நாட்டு சனி மற்றும் சனி மகாதசை காலத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் அப்போதும் சனி உடனிருந்து அருள் புரிவார்
இந்த ராசியின் அதிபதி புதன். சனி இவர்களுக்கு எப்போதும் அனுகூலமான பலன்களையே அளிக்கிறார். இவர்களது குடும்ப வாழ்க்கையை மகிழ்விக்கச்செய்கிறார்.
குரு பகவான் மீன ராசியின் அதிபதி ஆவார். குரு பகவானின் ஆசி பல நல்ல பலன்களை அளிக்கும், மீன ராசிக்காரர்கள் மீது சனி பகவானும் விசேஷ அன்புடன் நடந்துகொள்வார்.
கன்னி ராசிக்கும் புதன் தான் அதிபதி. இவர்கள் மீது எப்போதும் சனி பகவான் விசேஷ அருள் புரிவார். ஏழரை சனியின் தாக்கங்களையும் குறைத்தே கொடுப்பார்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.