Flipkart மெகா சேல் 2024 தேதி கசிந்ததா? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்தும் இதோ..

Flipkart Big Billion Days Sale 2024: இந்தியாவின் உள்நாட்டு இ-காமர்ஸ் சந்தையான பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2024 விற்பனை செப்டம்பர் 30 முதல் தொடங்கும் எனத் தகவல்.

Flipkart In India: இந்தியாவின் உள்நாட்டு இ-காமர்ஸ் சந்தையான பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2024 (Flipkart Big Billion Days 2024) விற்பனை குறித்து முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.

1 /8

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2024 (Flipkart Big Billion Days 2024) விற்பனை குறித்து முக்கியத் தகவல்

2 /8

தீபாவளி மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை உள்ளிட்ட பண்டிகை காலம் விரைவில் நெருங்கி வருவதால், ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை விரைவில் தொடங்க உள்ளது. 

3 /8

பிக் பில்லியன் விற்பனையின் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் 10% உடனடி தள்ளுபடியைப் பெறுவதற்கு கடந்த காலத்தில் வாய்ப்பளித்துள்ளனர். மேலும், பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் சலுகைகள் மூலம் நுகர்வோருக்கு கட்டணமில்லா EMI-ல் கிடைக்கும்.

4 /8

பிளிப்கார்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்பாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனை நடத்தும். 

5 /8

இந்த விற்பனையின்போது மெகா தள்ளுபடிகள், ஆஃபர்கள் மற்றும் கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விற்பனை நாளை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

6 /8

பிளிப்கார்ட் ஈ-காமர்ஸ் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் 2024 விற்பனை தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், செப்டம்பர் 29 முதல் விற்பனை தொடங்கும் எனத் தெரிகிறது. 

7 /8

பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 29 நள்ளிரவு முதல் பிக் பில்லியன் டேஸ் 2024 சேவை கிடைக்கும். மற்ற வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் சேவை தொடங்கும்.

8 /8

கடந்த ஆண்டு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2023 விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கக்து.