நுரையீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உங்கள் இரத்தத்தில் அழுக்குகள் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர் சுவாசம் மட்டுமல்ல, இரத்தம் தொடர்பான நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். ஏனெனில் நுரையீரலின் முக்கிய வேலை இரத்தத்தை சுத்திகரிப்பதாகும்.
தற்போதைய வாழ்க்கை முறை, புகை பழக்கம், காற்று மாசுபாடு, போன்றவற்றினால், நுரையீரலில் அழுக்குகளும் நச்சுக்களும் சேர்வதால், நுரையீரல் பலவீனமடைகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக் கூடும்.
நுரையீரலை பராமரிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நீண்ட காலத்திற்கு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
உங்களுக்கு சிகரெட் அல்லது பீடி புகைக்கும் பழக்கம் இருந்தால், குறிப்பிட்ட வைட்டமின் சப்ளிமெண்ட்மாத்திரை எடுத்துக் கொள்வதால், நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.