குளிர்காலத்தில் சில உணவு வகைகளை தவிர்த்தும், சில ஆரோக்கியமான உணவு வகைகளை சேர்ப்பதன் மூலமும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாக்கலாம்.
பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை குளிர்காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் உங்களுக்கு சளி பிரச்சனை ஏற்படும். இதனால் உங்கள் உடலில் சளி அதிகரித்துவிடும்.
காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் உங்கள் உடலில் அதிகப்படியான நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடல் பலவீனமடைந்து சளி மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகள் உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகளை சேர்ப்பதோடு, உங்களுக்கு சளி மற்றும் இருமலை ஏற்படுத்திவிடும்.
அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும். இதனால் சளி மற்றும் இருமல் அதிகரிக்கும்.
ஆல்கஹால் அதிகம் சாப்பிடுவதால் உங்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் அழிந்து உங்கள் உடல்நிலை சரியில்லாமல் போகும் வாய்ப்பு ஏற்படும்.