கடக ராசிக்கு வரும் சுக்கிரன்... இன்னும் சில மணிநேரங்கள் தான் - குஷியாகப் போகும் இந்த 4 ராசிகள்!

Venus Transit In Cancer 2023: கடக ராசியில் சுக்கிரன் நாளை இரவு பெயர்ச்சியாக உள்ள நிலையில், இனி இந்த நான்கு ராசிக்காரர்கள்  இல்லறம் மற்றும் பொருள் ரீதியில் மகிழ்ச்சியையும், புகழையும் பெறுவார்கள். 

 

 

 

 

 

 

 

1 /7

ஜோதிடத்தில், செல்வம், அழகு, கலை, காதல், பொருள் மகிழ்ச்சி உள்ளிட்டவற்றின் காரணியாகக் சுக்கிரன் கருதப்படுகிறது. சுக்கிரன் கிரகம் ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று அதாவது நாளை இரவு 7.17 மணிக்கு கடக ராசியில் உதயமாகும். சுக்கிரன் கடகத்தில் சுமார் 23 நாட்கள் இருக்கும்.

2 /7

வேத ஜோதிடத்தில், ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். ஒருவரது ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், அவர்களுக்கு ஆடம்பரம், இல்லற ரீதியிலான மகிழ்ச்சி, பொருள் ரீதியிலான மகிழ்ச்சி, புகழ் உள்ளிட்டவை கிடைக்கும். இப்போது கடகத்தில் சுக்கிரன் உச்சம் பெறுவதால், அதுபோன்ற சில ராசிகள், சிறப்பான பலன்களைப் பெறும். அந்த ராசிகளைப் இங்கு காணலாம். 

3 /7

மேஷம்: இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தில் நான்காம் வீட்டில் சுக்கிரன் உதயமாகும். வாழ்க்கைத் துணை, உடல்நலப் பிரச்சனைகள், சேமிப்பு மற்றும் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் போன்றவற்றால் நீங்கள் சிரமப்பட்டிருந்தால், அவற்றில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். மற்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் முயற்சிகள் நல்ல பலனைத் தரும் மற்றும் வீட்டில் எங்கும் மகிழ்ச்சி காணப்படும்.

4 /7

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களின் மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உதயமாகும். அதனால் பழைய பிரச்சனைகளில் இருந்து மீள்வீர்கள். வாழ்க்கையை மேம்படுத்தி முன்னேற இந்த காலகட்டத்தை பயன்படுத்துவீர்கள். ஆக்கப்பூர்வமான எழுத்து, அச்சு ஊடகம், எழுத்து போன்றவற்றில் தொடர்புடையவர்களுக்கு இக்காலகட்டத்தில் நற்பலன்கள் கிடைக்கும்.

5 /7

கடகம்: கடக ராசிக்கு 4 மற்றும் 11ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன். அதனால் தான் இந்த ராசிக்கு சுக்கிரன் மிகவும் முக்கியமானது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு முதல் வீட்டில் அதாவது லக்னத்தில் உதிப்பதால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் உங்கள் ஆளுமையால் அனைவரையும் கவர்வீர்கள்.

6 /7

மீனம்: மீன ராசிக்காரர்கள் இதுவரை காதல் வாழ்க்கையில் சண்டை, ஈகோ மோதல் போன்ற பிரச்சனைகளால் போராடி வந்தனர். ஆனால் இப்போது அவருடைய இந்த பிரச்சனை தீர்ந்து போகிறது. உங்கள் துணையுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துவீர்கள். விஷயம் திருமணத்தை அடையலாம். தனியாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். தொழில் ரீதியாகவும் இது சாதகமான காலமாக இருக்கும்.

7 /7

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)