வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் என்னவெல்லாம் கிடைக்கும்? மாணவர்களுக்கு டிப்ஸ்!

Guru Dakshinamoorthy: நவகிரகங்களில் குரு பகவான், திருமணத்தடைகளை நீக்குபவர். தட்சிணமூர்த்தியையும் குருவையும் ஒருவர் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர்.

  • Sep 26, 2024, 12:35 PM IST

Lord Guru Worship : தட்சிணாமூர்த்தி, சிவனின் ஸ்வரூபம் ஆவார். கல்விக்கு காரகரான தட்சிணாமூர்த்தியை மாணவர்கள் வழிபடுவது நல்லது.

1 /10

தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தித் தெளிவும் செயலில் உறுதியும் கிடைக்கும். சிவனின் ஸ்வரூபம் தட்சிணாமூர்த்தி ஆவார்

2 /10

தட்சிணம் என்றால் தெற்கு என்பது பொருள். தெற்குப் பார்த்த நிலையில் அமர்ந்திருப்பதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் பெற்று விளங்குகிறார் சிவபெருமான் எனச் சொல்கிறது சிவபுராணம். 

3 /10

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு உதவியாக இருக்கும்

4 /10

சனகாதி முனிவர்களுக்கு சிவபெருமானே உபதேசித்து அருளினார். அதனால்தான், ஞானம் வேண்டுபவர்கள், தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்

5 /10

ஸ்ரீதட்சிணாமூர்த்தி மூலமந்திரம் ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ; 

6 /10

தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம் ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே த்யாநஸ்தாய தீமஹி தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்

7 /10

வீட்டில் தினசரி தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் ஜபித்து வருவது நல்லது. வீட்டில் சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். 

8 /10

மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு அவசியம்

9 /10

தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிறம் உகந்தது. வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவேண்டும். 9 என்ற எண்ணிக்கை வருவது போல, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் ஊற வைத்த கொண்டைக்கடலையை மாலையாய் கோர்த்து சாற்றி வழிபட்டால் வாழ்வில் எல்லாவிதமான மேன்மைகளும் கிடைக்கும்

10 /10

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

Next Gallery