Guru Peyarchi: திருமணத்திற்கும், ஞானத்திற்கும் காரகரான குரு பகவான் மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்குள் நுழைகிறார். இதன் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் எதிரொலிக்கும்.
குரு பார்க்க கோடி நன்மை என்றால், அவர் மனம் மகிழ்ந்தா, மனதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழலாம். குரு பகவானுக்கான பரிகாரங்களை செய்தால், வாழ்வில் நிம்மதியாக இருக்கலாம். குருப் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள் இவை...
கன்னி ராசிக்கு பரிகாரம்: விஷ்ணுவை வணங்கி கற்பூரம் ஆரத்தி செய்ய வேண்டும்
ரிஷபம் பரிகாரம்: வெல்லம் மற்றும் கருப்பு எள் கலந்து உணவு தயார் செய்து, அதில் மஞ்சள் திலகம் தடவி, பழுப்பு நிற பசுவிற்கு உணவளிக்கவும். இதை வியாழன் அன்று செய்வது நல்லது
விருச்சிக ராசிக்கு பரிகாரம்: தினமும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்ய வேண்டும்.
தனுசு ராசிக்கு பரிகாரம்: தேவகுரு வியாழனின் பீஜ மந்திரத்தை தினமும் 108 முறை சொல்ல வேண்டும்
மீனம் பரிகாரம்: மஞ்சள் புஷ்பராகத்தை ஆள்காட்டி விரலில் தங்க மோதிரத்தில் அணிய வேண்டும்.
துலாம் பரிகாரம்: பசு நெய்யில் மஞ்சள் நிற சாதம் செய்து, அதை விஷ்ணுவுக்குப் படைக்கவும். பிறகு பிரசாதமாக நீங்களே சாப்பிடுங்கள்.
சிம்ம பரிகாரம்: வியாழன் அன்று வியாழன் பீஜ மந்திரத்தை ஓத வேண்டும், புதன் கிழமை அன்று மாலை கருப்பு எள்ளை தானம் செய்ய வேண்டும்.
மிதுனம் பரிகாரம்: வியாழன் அன்று ஒரு மாணவருக்கோ அல்லது ஒரு பிராமணருக்கோ கல்விக்கு உதவும் பொருட்களை தானம் செய்யுங்கள்.
மகர ராசி பரிகாரம்: தினமும் உங்கள் நெற்றியில் குங்குமம் வைக்க மறக்க வேண்டாம்
கடகம் பரிகாரம்: வியாழன் அன்று ஆலமரத்திற்கு தண்ணீர் ஊற்றி, வலம் வரவும்
மேஷம் பரிகாரம்: வெல்லம் மற்றும் கருப்பு எள்ளை அதிகம் பயன்படுத்தவும் பசுவுக்கு உணவளிக்கவும்
கும்பம் பரிகாரம்: குருப் பெயர்ச்சியில் நல்ல பலன்களை அடைய மஞ்சள் நிறத்தை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்துங்கள்