அடுத்த உலக கோப்பைக்கு இப்போதே அப்டேட் கொடுத்த ஜூனியர் கேப்டன்

அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கு இப்போதே அப்டேட் கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா

 

 

1 /5

நியூசிலாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான 20 ஓவர் இந்திய அணி, நாளை மறுநாள் நியூசிலாந்து அணியுடன் 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

2 /5

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா பங்கேற்றார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தார்.

3 /5

பின்னர் பேசிய அவர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியின் பயணம் இப்போதே தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

4 /5

தான் சொல்வது மிகவும் சீக்கிரமாக இருந்தாலும், இனி ஒவ்வொரு போட்டியையும் அந்த கோப்பைக்கான பயணமாக இருக்கும் என கூறியுள்ளார். 

5 /5

இன்னும் 2 ஆண்டுகளில் அனைத்து வீரர்களுக்கும் இந்திய 20 ஓவர் அணியில் போதுமான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.