குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமான திராட்சையில், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆஸிடண்ட் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்றாலும், சிலர் இதனை அதிக அளவில் சாப்பிடுவது ஆபத்தாக அமையும்.
திராட்சையில் உள்ள சர்க்கரை வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். எனவே வயிற்று பிரச்சனை ஏதும் இருந்தால், திராட்சையை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
திராட்சைகளில் காணப்படும் பாலிபினால்கள் காரணமாக குழந்தைக்கு கணைய பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே குறைந்த அளவில் திராட்சையை உட்கொள்ளுங்கள்.
இது தவிர, அதிக திராட்சை சாப்பிடுவதால், நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது சர்க்கரை பிரச்சனை இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால், திராட்சை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
திராட்சையை அதிகமாக சாப்பிட்டால், வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை அதிகரிக்கும். திராட்சையை குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. திராட்சையில் சாலிசிலிக் அமிலம் உள்ளது, அதை அதிகமாக உட்கொண்டால் வீக்கம், வயிற்று வலி, போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
திராட்சை பழத்தை சாப்பிடும் போது சில சமயங்களில், தவறுதலாக அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவதால் குடல் அழற்சி அஜீரணக் கோளாறு ஆகியவை ஏற்படலாம்.