Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவை விரும்புபவர்களுக்கு இந்த நோய்கள் ஏற்படலாம்

Side Effects of Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது நமது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் 

சமைத்த உடனே உண்ணாமல், உறை நிலையில்  பேக்கேஜ் செய்யப்பட்ட அல்லது பல்வேறு வழிகளில் வலுவூட்டப்பட்டு பாதுகாத்து வைக்கப்படும் உணவுகள் "பதப்படுத்தப்பட்ட உணவு" என்று குறிப்பிடப்படுகின்றன

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்

1 /6

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் யாரும் அவற்றை பரிந்துரைப்பதில்லை. ஆனால் அனைவரும் உண்பதாலும், அவற்றின் பிரபலத்தன்மையுமே பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளச் செய்கிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படக்கூடிய சில பொதுவான உடல்நலப் பிரச்சனைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

2 /6

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை உள்ளது, இது உடல் எடையை அதிகரிக்கிறது

3 /6

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்தும். இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் 

4 /6

பதப்படுத்தப்பட்ட உணவை உண்பதால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பன்றி இறைச்சி, ஹாட் டாக், மாட்டிறைச்சி ஜெர்கி மற்றும் இரசாயன பாதுகாப்புக்கு உட்பட்ட பிற இறைச்சி தயாரிப்புகள் உட்பட, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உடலுக்கு ஆபத்தானவை

5 /6

பதப்படுத்தப்பட்ட உணவு உணவுகள் அதிக கவலை மற்றும் மனச்சோர்வு விகிதங்களுடன் தொடர்புடையவை. கூடுதல் சர்க்கரைக நுகர்வு வயிற்றில்  பிரச்சனையை  உருவாக்கும்

6 /6

செரோடோன் உற்பத்தியை பதப்படுத்தப்பட்ட உணவுகள் பாதிக்கின்றன.  பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் இரசாயன சேர்க்கைகள் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்