உப்பு என்பது உணவுக்கு சுவை கொடுக்கிறது. உப்பில்லாத பண்டம் குப்பையிலே. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உப்பு என்பது உணவுக்கு சுவை கொடுக்கிறது. உப்பில்லாத பண்டம் குப்பையிலே. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உப்பை அளவோடு உட்கொள்ளும் போது நம் உடலும் நன்மை ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. தினமும் நாம் உடம்புக்கு சோடியம் தேவைதான். ஆனால் அதிகமாக உட்கொள்ளும் போது தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம்.
அதிகமாக உப்பு எடுத்துக்கொண்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதோடு மன அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய்கள் உருவாகும். உங்களுக்கு ஆரோக்கியமான இதயம் வேண்டும் என்றால், உப்பு சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
அதிகமான உப்பு உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை துாண்டி, உடம்பில் சிறுநீரகங்கள் நீரை வெளியேற்றும் தன்மையை பாதித்து, அதனால் சிறுநீர் வெளியேறுவது குறைகிறது. இதனால் கால், உடல் வீக்கம் ஏற்படும்.
உங்களுக்கு உணவில் அதிகமாக உப்பு பயன்படுத்தும் பழக்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.