உடல் எடையை சுலபமா குறைக்க ஒரு சுவையான வழி: இந்த பழங்கள் போதும்

Weight Loss Tips:உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது.

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பதால், பல வித உடல் உபாதைகள் நம்மை ஆட்கொள்கின்றன. ஆகையால், உடல் பருமனை உடனடியாக சரி செய்வது அவசியம். உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். சில பழங்களை உட்கொள்வதன் மூலம் எடையை குறைக்க முடியும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

1 /9

தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைப்பதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் பருமனை சரி செய்து எடை இழப்பில் உதவும் பழங்கள் பற்றி இங்கே காணலாம்.

2 /9

கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் அதிக அளவில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளன. இந்த பண்புகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, உடல் பருமனை குறைத்து, எடை இழப்பில் உதவுகின்றன. மேலும் கொய்யாப்பழம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகின்றது.

3 /9

சீதாப்பழம்: சீதாப்பழத்தில் வைட்டமின்கள் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இது செரிமானத்தை சீராக்குவதோடு மலச்சிக்கலிலும் நிவாரணம் அளிக்கிறது. உடலில் சேர்ந்துள்ள அதிகமான கொழுப்பைக் குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகின்றது.

4 /9

மாதுளை: ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ள மாதுளையில் கலோரி அளவு குறைவு. இந்தப் பழத்தை உணவிற்கு முன்னரும் பின்னரும் உட்கொள்வதால் உடலுக்கு அதிக அளவில் ஆற்றல் கிடைக்கும். எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்

5 /9

கிவி: மிகக் குறைந்த கலோரி அளவு கொண்ட கிவி பழம் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தால் நிரம்பியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது.

6 /9

ஆரஞ்சு: வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை அதிகமாக உள்ள ஆரஞ்சில் கலோரிகள் மிக குறைவாக உள்ளன. தொப்பை கொழுப்பை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், நிறைவான உணர்வை அளிக்கவும் ஆரஞ்சு பழம் மிக உதவியாக இருக்கும்.  

7 /9

ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. செரிமானத்தை சீராக்கவும் இனிப்புக்கான ஏக்கத்தை குறைக்கவும் இது பயன்படுகிறது. உடல் எடையை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இது அளிக்கின்றது.

8 /9

அவகேடோ: அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இதை உட்கொள்வதால் பசி கட்டுக்குள் இருக்கின்றது. இதன் மூலம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உண்வுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது பசியைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.