Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் கிரகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த கிரகம் ஆறுதல், ஆடம்பர வாழ்க்கை, காதல் மற்றும் குடும்பம் போன்றவற்றுடன் தொடர்புடையது. தற்போது சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். பஞ்சாங்க குறிப்புகளின் படி, சுக்கிரன் இப்போது சிம்மத்திற்கு வரப் போகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் நிலை மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளில் அதிக தாக்கம் இருக்கும்.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 31 ஆகஸ்ட் 2022 அன்று, புதன்கிழமை மாலை 4:9 மணிக்கு, சுக்கிரன் சிம்ம ராசியில் நுழைகிறார். சிம்மம் சூரியனின் ராசியாகும். இந்த ராசியின் அதிபதி சூரியன். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரனுக்கு சூரியன் மற்றும் சந்திரனுடன் பகை உள்ளது. சுக்கிரனும் பணத்துடன் தொடர்புடையவர். எனவே, இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
சுக்கிரனின் சஞ்சாரம் கடக ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் ஆடம்பர செலவுகளுக்கு பணம் இல்லாமல் போகலாம். கடன் வாங்கும் நிலை கூட ஏற்படலாம். இந்த சூழ்நிலையை முடிந்தவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் தேவையில்லாத அல்லது தற்போது உபயோகமில்லாத விஷயங்களுக்கு பணத்தைச் செலவு செய்யாதீர்கள். கடக ராசிக்கு அதிபதி சந்திரன் என்பதையும், சந்திரனுடன் சுக்கிரனுக்கும் பகை இருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
சுக்கிரனின் ராசி மாற்றம் சிம்ம ராசியிலேயே நடக்கப் போவதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில், திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். குணம் மற்றும் மரியாதை குறித்து கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் செலவுகளும் அதிகரிக்கலாம்.
சுக்கிரனின் இந்த சஞ்சாரம் உங்கள் செலவுகளை அதிகரிக்கும். வீட்டின் நிதிநிலையில் குழப்பங்கள் ஏர்படலாம். இந்த நேரத்தில், உங்கள் வரவு செலவுகளை நீங்கள் முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். புதிதாக கடன் வாங்காமல் இருப்பது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். அனைத்து வகையான வீண் செலவுகளையும் தவிர்க்கவும். இல்லையெனில், பதற்றம் மற்றும் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.