சருமம் என்றென்றும் இளமையுடன் ஜொலிக்க ‘சில’ எளிய டிப்ஸ்

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பது தான் பொஎரும்பாலானோரொன் ஆசையாகவும் எண்ணமாகவும் இருக்கும். அந்த வகையில், இளமையான தோற்றமளிக்க சரும இளமையாக இருப்பது முக்கியம். சுருக்கங்கள், வறட்சி இல்லாத பளபளப்பான சருமத்தை பெற சில எளிய டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்.

 

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பது தான் பொஎரும்பாலானோரொன் ஆசையாகவும் எண்ணமாகவும் இருக்கும். அந்த வகையில், இளமையான தோற்றமளிக்க சரும இளமையாக இருப்பது முக்கியம். சுருக்கங்கள், வறட்சி இல்லாத பளபளப்பான சருமத்தை பெற சில எளிய டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும்.

 

1 /5

நிறைய தண்ணீர் குடிப்பது சருமத்தில் உள்ள செல்களில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சிறிது புதினா சேர்த்து தண்ணீர் குடிப்பது நல்லது.

2 /5

வெளியில் செல்வதற்கு முன் உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறக்காதீர்கள். இது புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் மாசுபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குகிறது.

3 /5

தினமும் ஸ்க்ரப் செய்யுங்கள் - தினமும் குறைந்தது 10 வினாடிகள் வீட்டில் ஸ்க்ரப் செய்வது. இறந்த செல்களை அகற்ற உதவும். வீட்டில் ஸ்க்ரப் தயாரிக்க கொரகொரப்பாக பொடித்த அக்ரூட் பருப்பு அல்லது அரிசியை பயன்படுத்தலாம். வீட்டிலேயே ஒரு ஸ்க்ரப் தயாரிப்பதன் மூலம், இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதில் உள்ள பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம்.

4 /5

ஸ்க்ரப்பிங் செய்த பிறகு, உங்கள் சருமத் துவாரங்களைச் சுருக்க ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.  பப்பாளியை மசித்து பூசிக் கொள்ளலாம் அல்லது தயிரில் கடல் மாவுடன் கலந்து அதனை முகத்தில் பூசி பின் அரை மணி நேரம் கழித்து சுத்தப்படுத்தலாம். தயிர் சருமத்திற்கும் நல்லது.

5 /5

குளிர் காலம் நெருங்கிறது. அந்த சமயத்தில் தோல், ஈரப்பதத்தை இழந்து வறட்சியாக காட்சியளிக்கிறது. சருமத்தை புத்துயிர் பெற படுக்கைக்குச் செல்வதற்கு முன் சருமத்தை சுத்தமாக கழுவி, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.