2022ல் காங்கிரசை விட்டு வெளியேறிய உயர் தலைவர்கள்

காங்கிரஸ் கட்சியில் இருந்து உயர் தலைவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். 2022-ல் காங்கிரஸிலிருந்து பிரிந்த உயர்மட்ட தலைவர்கள் பட்டியலில் கபில் சிபலும் இணைகிறார்.

காலங்காலமாக கட்சிக்கு சேவையாற்றிய தலைவர்கள், இந்தியாவின் பழைய கட்சியில் இருந்து பிரிந்து செல்வதால் காங்கிரஸில் நெருக்கடி நீடிக்கிறது. இந்த பட்டியலில் சமீபத்தில் கபில் சிபல் இணைந்தார்.

1 /7

கபில் சிபல் காங்கிரஸில் இருந்து வெளியேறியதன் மூலம், இந்த ஆண்டில் அக்கட்சியில் இருந்து வெளியேறும் ஐந்தாவது மூத்த தலைவர் என்ற அதிர்ச்சியை கட்சி தலைமைக்கு கொடுத்திருக்கிரார். கபில் சிபலுக்கு முன், பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஆர்.பி.என். சிங், முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் படிதார் தலைவர் ஹர்திக் படேல் என கட்சியில் இருந்து தலைவர்களின் வெளிநடப்பு தொடர்கிறது

2 /7

காங்கிரஸின் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தும் வகையில், ஜி-23 குழுவின் முக்கிய முகமான கபில் சிபல், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். 

3 /7

உத்தரபிரதேசத்தில் இருந்து லக்னோவில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பிற கட்சி தலைவர்கள் முன்னிலையில் சிபல் வேட்புமனு தாக்கல் செய்தார். ராஜ்யசபாவில் இருந்து ஜூலை 4ம் தேதி ஓய்வு பெறுகிறார் கபில் சிபல். மே 16ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்திருந்தேன் என வேட்புமனு தாக்கல் செய்த பின் தெரிவித்தார். "நான் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் சுயேட்சையாக குரல் கொடுப்பதையே எப்போதும் விரும்புவேன். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே கூட்டணியை உருவாக்கி மோடி அரசை எதிர்க்க விரும்புகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.  

4 /7

குஜராத் படிதார் தலைவர் ஹர்திக் படேல் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகினார்.  தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும் என தலைவர் கூறினார். இந்துத்துவா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக சாடிய அவர், மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.  

5 /7

காங்கிரஸுடனான 50 ஆண்டுகால உறவை முறிப்பது எளிதல்ல என்று பாஜகவில் இணைந்த பிறகு சுனில் ஜாக்கர் கூறியிருந்தார். 1972 முதல் 2022 வரை காங்கிரசை தங்கள் குடும்பமாக கருதிய மூன்று தலைமுறையாக காங்கிரஸ் குடும்பத்தில் இருந்தது சுனில் ஜாக்கரின் குடும்பம்.  

6 /7

முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், கட்சித் தலைமையின் மீது கடும் அதிருப்தி அடைந்து வெளியேறிவிட்டார்.  "கடந்த பல மாதங்களாக புறக்கணிக்கப்பட்டதாகவும், இப்போது கட்சிக்கு தேவை இல்லை என்பதை புரிந்து கொண்டதால் வெளியேறிவிட்டதாக அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் காங்கிரசுக்கு தோல்வி ஏற்படும் என அவர் கணித்திருந்தார்.

7 /7

முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஆர்.பி.என். சிங், பாஜகவில் இணைந்தார். பதவி விலகுவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் ஜார்கண்ட் பொறுப்பாளராக இருந்தார் ஆர்.பி.என். சிங்.