Acidity Home Remedy: நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் சூடு ஆகியவை நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளாகும். இந்நிலையை தவிர்க்க, பெரும்பாலானோர் ஆங்கில மருந்துகளை உட்கொள்கிறார்கள். இதனால், உடனடி நிவாரணம் கிடைத்து நம் வேலைகளை நாம் தடையில்லாமல் செய்ய முடியும்.
மருத்துவரிடம் கேட்காமல் இதுபோன்ற மருந்துகளை உட்கொள்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மேலும் ஆங்கில மருந்துகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சில பக்க விளைவுகளையும் கொடுக்கின்றன. நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் உஷ்ணத்தில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் எளிதான வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாயுத் தொல்லையிலிருந்து உடனடி நிவாரணம் பெற எளிதான வழி உள்ளது. ஒரு ஸ்பூன் சோம்பு சாப்பிட்டு, இரண்டு அல்லது மூன்று டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். உடனடி நிவாரணம் பெறுவீர்கள். வாயுத்தொல்லை பிரச்சனை இருந்து, நீங்கள் பயணம் செல்ல வேண்டிய நிலை இருந்தால், சோம்பு மற்றும் சர்க்கரை மிட்டாய் சேர்த்து எடுத்துச்செல்லவும். கருஞ்சீரகம் மற்றும் சர்க்கரை மிட்டாயை உடன் வைத்திருங்கள். இதை சேர்த்து சாப்பிடுவதால் அமிலத்தன்மையிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வெல்லத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரண்டும் உள்ளன. அவை உடலில் pH சமநிலையை பராமரிக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. ஒரு சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டு வர, உங்கள் எரிச்சல் பிரச்சனை முற்றிலும் குணமாகும். அதிக அளவில் சாப்பிட்டால் எரியும் உணர்வு அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ஓமம் நம் நாட்டில் அனைத்து வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஸ்பூனில் நான்கில் ஒரு பங்கு ஓம விதைகளை மென்று தின்று சிறிது தண்ணீர் அருந்துங்கள். இதன் மூலம் உடனடி நிவாரணம் பெறுவீர்கள். வீட்டில் கற்பூரவல்லி இலைகள் இருந்தால், அவற்றை கருப்பு உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு சிறிது தண்ணீர் குடிக்கவும். இந்த இரண்டு முறைகளும் நெஞ்செரிச்சல், வயிற்றில் வெப்பம் மற்றும் குமட்டல் போன்றவற்றில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)