இ-பான் கார்டை இலவசமாகவே டவுன்லோடு செய்து கொள்ளலாம், இதற்கென அரசாங்கம் உங்களிடம் தனியாக கட்டணம் எதையும் வசூலிக்காது.
முதலில் onlineservices.nsdl.com என்கிற NSDL இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
இ-பான் கார்டை டவுன்லோடு செய்ய உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும், ஒன்று அக்னாலெட்ஜ்மென்ட் எண்ணை பயன்படுத்தி அல்லது பான் வழியாக என எதாவது ஒரு ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
பான் ஆப்ஷனை தேர்தெடுத்தால் பான், ஆதார் எண், பிறந்த தேதி போன்ற தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும். அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு, 'சமர்ப்பி' என்பதை க்ளிக் செய்வதன் மூலம் NSDL இணையதளம் வழியாக இ-பான் கார்டை டவுன்லோடு செய்யலாம்.
அக்னாலெட்ஜ்மென்ட் எண்ணை பயன்படுத்தியும் இ-பான் கார்டை டவுன்லோடு செய்யலாம், அதனை UTIITSL இணையதளம் வாயிலாகவும் டவுன்லோடு செய்யலாம்.