பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் இன்று முதல் விநியோகம் - பெறுவது எப்படி?

Pongal gift | தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்

Pongal gift token | தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /10

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை ஜனவரி 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்பட உள்ளது. இதனுடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

2 /10

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் (Pongal gift token) இன்று முதல் தொடங்குகிறது. அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாகவும் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அந்த டோக்கனில் இடம்பெற்றிருக்கும்.

3 /10

அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் (Ration Card) சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் என டோக்கன் விநியோகம் செய்யப்பட்டவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. 

4 /10

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது போல அனைத்து விதிமுறைகளையும் ரேஷன் கடை ஊழியர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் எந்தவிதமான குளறுபடிகளும், புகார்களும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 /10

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள கூட்டுறவுத்துறை, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி ஊழியர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

6 /10

பொங்கல் பரிசுத் தொகுப்பு (Pongal Parisu) விநியோகம் செய்யப்படுவதால் பாதுகாப்பு அளிப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்துக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சர்க்கரை, கரும்பு, அரிசி விநியோகம் நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களுக்குள் பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய் ரொக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

7 /10

இதுவரை ஆயிரம் ரூபாய் ரொக்கம் விநியோகம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழ்நாடு அரசு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நல்ல செய்தி வரும் என்றும் அரசு வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 

8 /10

பொங்கல் பண்டிகை முடிந்தும் ஒருசில இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் கடந்த ஆண்டுகளில் நடந்த நிலையில், இம்முறை முன்கூட்டியே முடிக்க கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் இடம்பெற்றிருக்கும் தேதி மற்றும் நேரத்தில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.

9 /10

ரேஷன் அட்டையில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள முடியும். மற்றவர்களிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்படாது. 

10 /10

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். டோக்கன் இல்லாதவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படாது என்பதை அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.