சோகமான சமயங்களில் உங்களை நீங்களே ஊக்கப்படுத்துவது எப்படி? 8 ஈசியான வழிகள்!

How To Motivate Yourself : சோகமாக இருக்கும் போது, நம்மை நாமே எப்படி மோட்டிவேட் செய்து கொள்வது? அதற்கான டிப்ஸ், இத

How To Motivate Yourself : மனிதர்கள் அனைவருக்குமே, ஒரு நாள் போல அனைத்து நாட்களும் இருந்து விடாது. ஒரு நேரம் இருப்பது போலவே நமக்கு அனைத்து நேரங்களிலும் வாழ்க்கை இருந்துவிடாது. அப்படி, நமக்கு சோகமான நேரங்களில் மீண்டும் நமது பழைய நிலைக்கு திரும்புவது கொஞ்சம் கடினமானதாக இருக்கும். அப்போதெல்லாம் நம்மை ஊக்குவிக்கும் ஆளாக நாம் மட்டுமே இருக்க வேண்டிய சூழல் வரலாம். அப்போது, என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

1 /8

உணர்வுகளுக்கு மதிப்பு:  உங்களுக்கு ஏற்படும் உணர்வு எதுவாக இருந்தாலும், அதை நீங்கள் முதலில் மதிக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் உங்கள் உணர்வுகள் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட நிலை ஏற்படும் போது கூட நீங்கள் உங்களுடன் இருக்க வேண்டியது நல்லது.

2 /8

சிறிய இலக்குகள்: உங்களுக்கு வாழ்க்கை கடினமாக இருக்கும் சமயங்களில், உங்களை முன்னேற்றிக்கொள்ளும் வேலைகளை சிறிது சிறிதாக மாற்றி அதை அடைய முயற்சி செய்யலாம். சிறிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதால் உங்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும்.

3 /8

உடற்பயிற்சி:  உடற்பயிற்சி அல்லது, உங்கள் உடலுக்கு உழைப்பு கொடுப்பது போன்ற வேலைகளை செய்வது உங்கள் மன நிலையை உடனே உத்வேகப்படுத்தும்.

4 /8

பிறரிடம் பேசுவது: உங்களின் நம்பிக்கைக்குரிய நபர்களிடம் சென்று, அவர்களிடம் உங்கள் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை சொல்லலாம். இதனால் உங்களுக்கு ஒரு வித பாதுகாப்பான உணர்வு கிடைக்கும். 

5 /8

உங்களை மேம்படுத்தும் விஷயங்கள்: உங்கள் மன நலனையும் உடல் நலனையும் மேம்படுத்தும் விஷயங்களை செய்யலாம். அது ஒரு சூடான குளியலாக இருக்கலாம். உங்களுக்கு பிடித்த பாடலை கேட்பதாக இருக்கலாம். 

6 /8

தினசரி வழக்கம்: உங்களுக்கென்று ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்கி அதை தினமும் செய்து பாருங்கள். அது காலையில் சரியாக 6 மணிக்கு எழுந்து, நடைப்பயிற்சி செய்வதாக இருக்கலாம், அல்லது இரவு தினமும் 10 மணிக்கு உறங்க செல்வதாக இருக்கலாம். 

7 /8

நெகடிவ் எண்ணங்கள்: உங்களுக்குள் ஏற்படும் நெகடிவான எண்ணங்களை எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். இது, நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றும். 

8 /8

உங்களுக்கு பிடித்த செயல்: தினமும், உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலை செய்யுங்கள். அது, புத்தகம் படிப்பதாக இருக்கலாம், கதை எழுதுவதாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும், அது உங்களுக்கு பிடித்த விஷயமாக இருக்க வேண்டும்.