Fixed Deposits Interest Rates: ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிலையான வைப்புத்தொகை (FD) வரப்பிரசாதமாகும். அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு FD திட்டத்தில் நல்ல வட்டி வருவாயை கொடுக்கும் வங்கிகளை இங்கு காணலாம்.
நிலையான வைப்புத்தொகையில் நீங்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஒரு பெருந்தொகையை அதில் நிலையாக டெபாசிட் செய்து வைப்பதன் மூலம் அதில் இருந்து பெருந்தொகையை நீங்கள் வட்டியாக பெறலாம்.
வங்கிகளில் ஒரு பெரிய தொகையை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு நீங்கள் நிலையான வைப்புத்தொகை திட்டத்தின்கீழ் டெபாசிட் செய்து வைத்தால் இந்த 7 வங்கிகள் 7.9% வரை வட்டி விகிதம் வழங்கப்படும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: பொது குடிமக்களுக்கு 456 நாள் நிலையான டெபாசிட்டுக்கு 7.3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் வட்டி வகிதத்தில் கூடுதலாக கிடைக்கும்.
பேங்க் ஆப் பரோடா: இங்கு பொது குடிமக்களுக்கு 7.3% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.8% வட்டி வகிதமாக கிடைக்கும். இவை 400 நாள்களுக்கான FD திட்டத்திற்கு ஆகும். இந்த மாற்றம் கடந்த அக். 14ஆம் தேதியே அமலுக்கு வந்துவிட்டது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: இங்கு மூத்த குடிமக்களுக்கு 7.5% மற்றும் பொதுமக்களுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்கப்படுகிறது. இது 2-3 ஆண்டு FD திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இது கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது.
ஃபேடரல் வங்கி: இங்கு 777 நாள்கள் FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.9% மற்றும் பொதுமக்களுக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது அக். 16ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது.
கோடக் மஹேந்திரா வங்கி: 390-391 நாள்கள் FD திட்டத்தில் பொதுமக்களுக்கு 7.4% வட்டி விகிதம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு இதில் 50 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக கிடைக்கும். இது ஜூன் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
ஐசிஐசிஐ வங்கி: இங்கு 15 - 18 மாதங்களுக்கான FD திட்டத்தில் பொதுமக்களுக்கு 7.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.80% வட்டி விகிதமாக வழங்கப்படுகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி: இங்கு பொதுமக்களுக்கு 4 ஆண்டுகள் அல்லது 7-55 மாதங்களுக்கான FD திட்டங்களுக்கு 7.40% வட்டி விகிதமாக வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.90% வட்டி விகிதம் கிடைக்கிறது. இது கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.