நோய்கள் அண்டாமல் இருக்க... ‘இவற்றை’ தினமும் உங்கள் உணவில் சேர்க்கவும்!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா மற்றும் H3N2 தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நேரத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நாள் முழுவதும் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

1 /5

பாதாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. பாதாமை தினமும் உட்கொள்ளவது நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

2 /5

மஞ்சள் ஒரு சிறந்த மசாலா, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.  சிறிதளவு மஞ்சளை தண்ணீரில் கலந்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இஞ்சி, கருப்பு மிளகு ஆகியவற்றையும் இதில் சேர்க்கலாம்.

3 /5

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.  ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க இதுவே போதுமானது.

4 /5

கிரீன் டீ எடை மற்றும் உடல் கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இதனை உட்கொள்வதால், உடலில் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதோடு, சருமமும் பளபளப்பாகும்.

5 /5

தயிர் மற்றும் மோரில் உள்ள லாக்டிக் அமிலம் உடலுக்கு வலிமையைத் தருகிறது மற்றும் பல நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அளிக்கிறது.