சனியின் ஆட்டம் ஆரம்பம்.. நாளை சனி பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.. முழு ராசிபலன் இதோ

சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாளை 20ம் தேதி மாலை சரியாக 5:20 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்நிலையில் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

 

நவகிரகங்களில் சனியைப் பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சனி பெயரச்சி இடத்தைப் பொருத்து பலன்களும் பாதிப்பும் ஏற்படும். அந்த வகையில் சனிபகவான் கும்பம் ராசியில் ஆட்சி பெறுகிறார். மேலும் இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் விரைய சன என பலன்கள் நடைபெறும்.

1 /13

மேஷம்: 2024 ஆண்டு முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் லாபத்தை அள்ளித்தரப்போகிறார். தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். கடின உழைப்புக்கு முழு பலன் சிறப்பாக கிடைத்திடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் நிலவும். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

2 /13

ரிஷபம்: சனி பகவான் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். சனி பெயர்ச்சி ரிஷப ராசியின் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

3 /13

மிதுனம்: பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். 

4 /13

கடகம்: அஷ்டமத்து சனி காலத்தில் அகலக்கால் வைக்கக்கூடாது. தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். வணிக வர்க்கம், பெரிய ஆர்டர்களைப் பெறலாம். இந்த ராசிக்காரர்கள் அதிக லாபம் சம்பாதிப்பார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். எந்த பெரிய ஆசையும் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும்.   

5 /13

சிம்மம்: சனி பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து கண்டச்சனியாக பயணம் செய்தாலும் ஆட்சி பெற்ற சனி ஷஷ மகா யோகத்தை தரப்போகிறார். வேலை தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சனிபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்ற பணிகளை பெற்றிடலாம். உங்களுக்கு வளர்ச்சி உண்டாகும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. வெற்றி உங்கள் வசம் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். 

7 /13

துலாம்: சனி பகவானின் பெயர்ச்சியானது துலாம் ராசியினருக்கு பல விதத்தில் சாதகமானதாக அமையும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் முதலீடுகள் மூலம் லாபத்தையும், முதலீடுகள் செய்யவும் சாதகமானதாக இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சில நல்ல செய்திகளைப் பெற்றிடலாம்.  

8 /13

விருச்சிகம்: சனி பகவான் தற்போது அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார்.ஷஷ ராஜயோகம் வரப்போகிறது. புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

9 /13

தனுசு: சனி பெயர்ச்சிக்கு பிறகு உங்களின் கஷ்டங்கள், கவலைகள் நீங்கப்போகிறது. குழந்தை பாக்கியம் உண்டாகும். உயர் பதவி யோகம் உங்களை தேடி வரும். புதிய தொழில் அமையும். இனி உங்களுக்கு முழுமையான ராஜ யோகம் தேடி வரப்போகிறது புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.  

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியால் பொருளாதார ரீதியாகப் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பினால், பின்வாங்க வேண்டாம். இந்த காலம் அதற்கு ஏற்றதாக இருக்கும்.  

11 /13

கும்பம்: சனிபகவான் நாளை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. உணவுப் பழக்கங்களை முறைப்படுத்துங்கள். வயிறு தொடர்பான உபாதைகள் அதிகரிக்கும். 

12 /13

மீனம்: ஏழரைச்சனியாக இருந்தாலும் சனிபகவான் மீனராசிக்கு நல்ல பலன்களையே தருவார். பல முக்கியமான காரியங்கள் இனிதே நிறைவேறும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பல பிரச்னைகளைப் பேசியே தீர்த்துவிடுவீர்கள். குடும்பத்துக்குள். கணவன் -மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் தீரும். மனம் விட்டுப் பேசி பிரச்னைகளைச் சரி செய்வீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். மூத்த சகோதரர்கள் தேடிவந்து உதவிகள் செய்வார்கள். தாய்வழியில் சொத்து வந்து சேரும். நட்பு வட்டம் விரியும்.   

13 /13

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.