Ind vs Eng: 54 ஆண்டுகளுக்குப் பிறகு லீட்ஸில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த சீரிஸில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி,  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் தோல்வியைத் தழுவியது.

2002 ம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடிய போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்திய அணி.  அதற்கு பழி தீர்க்கும் விதமாக இன்றைய போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

Also Read | பழி தீர்த்தது இங்கிலாந்து அணி! இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இந்தியா! 

1 /4

ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கிய  3-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.  முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

2 /4

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 432 ரன்கள் எடுத்தது. 

3 /4

நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில்  இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.  இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே, 76 ரன்கள் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்த போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து சமநிலையில் உள்ளன.

4 /4

அடுத்த இரண்டு போட்டிகளும் இரு அணிகளுக்குமே முக்கியமானவை. 2002 ம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடிய போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்திய அணி.  அதற்கு பழி தீர்க்கும் விதமாக இன்றைய போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது.