அப்பா உளவாளி, அம்மா போதைப்பொருள் விற்பனையாளர் - ஜாக்கி ஜானின் வாழ்க்கை பயணம்

Jackie Chan : உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஜாக்கி சான் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

Jackie Chan  : உளவாளி அப்பா, போதைப் பொருள் விற்பனையாளர் அம்மா ஆகியோரின் மகனாக பிறந்து உலகப் புகழ்பெற்ற நடிகராக மாறிய ஜாக்கி சானின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இங்கே.

1 /10

இன்று உலகப் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் ஜாக்கி சான் இளமைக்காலம் கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்பா உளவாளியாகவும், அம்மா போதைப் பொருள் விற்பனையாளராகவும் இருந்ததால் இவரை குழந்தையிலேயே கைவிட்டுவிட்டனர்.  

2 /10

இதனால் ஆசிரமத்தில் வளர்ந்த ஜாக்கி சான், அங்கேயே தற்காப்பு பயிற்சி கலைகளைக் கற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் பேசும்போது, இளம் வயதில் பெற்ற இந்த கடினமான பயிற்சிகளால் தான் தனக்கு வாய்ப்புகள் கிடைத்தாக கூறுகிறார்.   

3 /10

இளம் வயதில் உடுத்த சரியான உடை இருக்காது, ருசியாக சாப்பிட உணவுகள் இருக்காது என கூறும் ஜாக்கி சான், தன் குழந்தைகளுக்கும் என்னுடைய சொத்துகளை கொடுக்க மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.  

4 /10

முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். அவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், அவரும் லெஸ்பியன் என அறிந்து தனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அறிவித்துவிட்டார்.   

5 /10

மற்றொரு திருமணம் செய்து கொண்ட ஜாக்கி சானுக்கு மகன் இருக்கிறார். ஆனால் அவரும் போதைப் பொருள் விவகாரத்தில் 6 மாதம் சிறைவாசம் செல்ல, நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்டார் ஜாக்கி சான்.  

6 /10

ஏனென்றால் 2009 ஆம் ஆண்டு முதல் போதைப் பொருள் தடுப்பு குறித்த தூதராக ஜாக்கி சான் இருந்து வருகிறார். அவருடைய மகனே போதைப் பொருள் உபயோகத்தில் சிக்கி சிறை சென்றதால் இந்த மன்னிப்பை கேட்டார்.  

7 /10

மேலும், தன்னுடைய மகனுக்கும் என் சொத்தில் பங்கு கொடுக்க மாட்டேன், அவருக்கு திறமை இருந்தால் அவரே சம்பாதித்துக் கொள்ளட்டும் என்றும் கூறிவிட்டார்.   

8 /10

ஜாக்கிசான் 8 உலக மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். இதனால் அவருக்கு கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல கின்னஸ் சாதனைகளையும் ஜாக்கி சான் படைத்திருக்கிறார்.

9 /10

சினிமாவில் பல சாதனைகள் படைத்தபோதும் உலக சினிமாவின் மிகப்பெரிய அங்கீகார விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஒருமுறைகூட அவருக்கு கொடுக்கப்படவில்லை. 

10 /10

ஜாக்கி சான் அடிக்கடி சொல்வது என்னவென்றால் ஒரு விஷயதிதல் பயிற்சி, முயற்சி, செயல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் எத்தகைய விஷயத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்கிறார்.