பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பைபேக் பாலிசி! சந்தையைவிட 25% அதிக லாபம் சம்பாதிப்பது எப்படி?

Bajaj Auto buyback 2024 : பஜாஜ் ஆட்டோ பங்குகள் இன்று எக்ஸ்-பைபேக் முறையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. 29 பிப்ரவரி 2024 நாளான இன்று பஜாஜ் ஆட்டோ பங்குகளை திரும்பப் பெறுவதற்கான நாளாக, ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, இந்திய பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.  

அதாவது, இன்றைய பங்குச்சந்தை அமர்வு முடிந்த பிறகு பஜாஜ் ஆட்டோ பங்குகளை வைத்திருப்பவர்கள், பஜாஜ் ஆட்டோ பங்குகளை நிறுவனத்திடமே திரும்பக் கொடுத்துவிட்டு பணம் பெற்றுக் கொள்ளலாம்.  

1 /7

பங்குகளை திரும்ப வாங்குவதாக அறிவித்துள்ள்ள பஜாஜ் ஆட்டோ பைபேக் விலையை ஒரு பங்கிற்கு ₹10,000 என அறிவித்துள்ளது. இன்று பங்குச்சந்தையில் பஜாஜ் ஆட்டோ பங்கு விலை ₹8,000 என்பதால், இந்த பைபேக் ஆஃபரில் 25% பிரீமியம் கொடுத்து நிறுவனம் தனது பங்குகளைத் திரும்பப் பெறுகிறது

2 /7

நிறுவனத்தின் அறிவிப்பு ஜனவரி 8, 2024 மற்றும் பிப்ரவரி 15, 2024 தேதியிட்ட முடிவுகளின்படி, பஜாஜ் ஆட்டோ நிறுவனட்தின் இயக்குநர்கள் குழுவின் படி, ₹10 முகமதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகள், ஒரு பங்குக்கு ₹10,000/- என்ற மொத்தத் தொகைக்கு மிகாமல் திரும்பப் பெறுகிறது. 

3 /7

பரிவர்த்தனை செலவுகள், பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் பிற தற்செயலான மற்றும் தொடர்புடைய செலவுகள் தவிர்த்து ₹4,000 கோடி இதற்காக செலவிட பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உத்தேசித்துள்ளது

4 /7

பஜாஜ் ஆட்டோ பைபேக் பதிவு தேதி  இயக்குநர்கள் குழுவால் அமைக்கப்பட்ட பைபேக் கமிட்டி, 2024 பிப்ரவரி 29 வியாழன் அன்று, பைபேக்கில் பங்கேற்கத் தகுதியுடைய பங்குதாரர்களின் உரிமை மற்றும் பெயர்களை நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக, இந்த நாளை பதிவு தேதியாக நிர்ணயித்துள்ளது

5 /7

பஜாஜ் ஆட்டோ இன்னும் பைபேக் சலுகை தேதிகள் மற்றும் பைபேக் விகிதத்தை அறிவிக்கவில்லை.  

6 /7

28 பிப்ரவரி 2024 வரை பஜாஜ் ஆட்டோ பங்குகளை வாங்கி, இன்றைய சந்தை முடிவிற்குப் பிறகு அதனை தொடர்ந்து வைத்திருப்பவர்கள், சலுகை காலத்தில் தங்கள் பங்கை டெண்டர் செய்யத் தகுதியுடையவர்கள்.

7 /7

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது