ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய கட்டண உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வருவகிறது.
பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களின் ரூ.349 கட்டணத்திலான ரீசார்ஜ் பிளான்களில், வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை கொடுத்து செலவை மிச்சப்படுத்த உதவும் திட்டம் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரீசார்ஜ் கட்டண உயர்வு: கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தனியார் தொலைத் தொடர்பு நிறூவனமான ஜியோ கட்டண உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.
ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் : ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். தினசரி 2ஜிபி டேட்டா என்ற அளவில் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும்.
ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்: ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைwது விடும். இதில், ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். தினசரி 1.5 ஜிபி டேட்டா என்ற அளவில் மொத்தம் 42ஜிபி டேட்டா வழங்கப்படும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் திட்டத்தில் விங்க் மியூசிக் ( Wynk Music), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.
வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்: வோடபோன் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். தினசரி 1.5 ஜிபி டேட்டா என்ற அளவில் மொத்தம் 42ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும்.
வோடபோன் ஐடியா ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில் டேட்டா டிலைட்ஸ் (Data Delights), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் பிஞ்ச் ஆல் நைட் டோட்டா (Binge All Night Data) போன்ற நன்மைகளும் கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்: ரூ.349 திட்டத்தில் ஜியோ நிறுவனம் தான் அதிக டேட்டாவை வழங்குகிறது. ஆனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் சில கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. எனவே அதிக டேட்டா தேவைப்படுபவர்கள் ஜியோவின் திட்டத்தில் ரீசார்ஜ் செய்து பயனடையலாம்.