குரு பெயர்ச்சி 2023, மீன ராசியில் அஸ்தமனமாகும் குரு, இந்த 5 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை

Guru Asta 2023 Effect: தற்போது குரு மீனத்தில் இருக்கிறார், ஏப்ரல் 22 ஆம் தேதி வரை இந்த ராசியில் தான் குரு இருப்பார். இதன் போது, குரு மார்ச் 31 ஆம் தேதி அஸ்தமித்து, ஏப்ரல் 30 ஆம் தேதி மீண்டும் உதயமாகுவார். அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகமான குரு அஸ்தமனம் சில ராசிக்காரர்களை இன்னல்களை தரும்.

குரு அஸ்தமனம்: குரு பகவான் மார்ச் 31ம் தேதி மீனத்தில் அஸ்தங்கம் நிலைக்கு செல்ல உள்ளார். மேலும் ஏப்ரல் 30 அன்று உதயமாகும். ஜோதிடத்தில் குரு பகவான் அஸ்தங்கம் நிலைக்கு செல்வது அசுபமானதாக கருதப்படுகிறது. அந்த ராசிகள் எவை என்பதை தெரிந்துக்கொள்வோம்.

 

1 /5

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களின் வேலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக தொழிலதிபர்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் தடைகள் வரலாம். திருமண வாழ்க்கையிலும் சிரமங்கள் ஏற்படலாம்.  

2 /5

கன்னி ராசி: குரு அஸ்தங்கம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். இந்த நேரத்தில், மற்றவர்கள் முன் உங்கள் வார்த்தைகளை பணிவாக முன்வைக்கவும்.  

3 /5

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு அஸ்தங்கம் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுத்தலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தாயின் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள்.  

4 /5

கும்ப ராசி: குரு அஸ்தங்கம் கும்ப ராசிக்காரர்களின் பேச்சில் வேகம் காணப்படும். பேசுவதில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நம்பிக்கையின்மை இருக்கலாம்.  

5 /5

மீன ராசி: மீன ராசியில் வியாழன் அமைவதால் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் இருக்காது. தொழிலில் பிரச்சனைகள் வரலாம். வேலை சுமை இருந்து கொண்டே இருக்கும். பொருளாதார நிலையும் நன்றாக இருக்காது. பணம் சம்பந்தமான எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.