’கம்யூனிஸ்டாக நடித்திருக்கிறேன்’ மாமன்னன் கேரக்டரை சொன்ன கிரீத்தி சுரேஷ்

மாமன்னன் படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக நடித்துள்ளேன் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

 

1 /6

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.   

2 /6

இதில் கலந்து கொள்ள வந்த கீர்த்தி சுரேஷ், விழா தொடங்கும் முன் பேசும்போது, “நீண்ட நாள் கழித்து தமிழில் எனக்கு ஒரு ரிலீஸ். பெரிய டீமுடன் வேலை பார்த்திருக்கிறேன்.     

3 /6

  படம் வேற மாதிரி இருக்கும். படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட். வித்தியாசமான படமாக எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.  

4 /6

  பொதுவான ஒரு விஷயத்தைப்பற்றி தான் பேசியுள்ளோம். எல்லோராலும் கனெக்ட் பண்ண முடியும். ஃபஹத் பாசிலுடன் எனக்கு காம்பினேஷன் குறைவு.  

5 /6

உதயநிதி, வடிவேலுவுடன் இணைந்து நடித்தது ஜாலியாக மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய டேக் போனோம்.         

6 /6

நிறைய சிரித்துக்கொண்டே இருந்தோம். ஜாலியான பயணமாக இருந்தது. ஆனால் படம் அப்படியிருக்காது. சீரியஸான படமாக இருக்கும்” என்றார்.