இன்னும் 12 நாட்களில் சனி வக்ர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு லாபம், 3 ராசிகளுக்கு நஷ்டம்

Shani Vakri 2023: சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார், மேலும் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே அமர்ந்திருப்பார். ஆனால் இதற்கிடையில் சனி இதே ராசியில் வக்ர நிலையில் இருப்பார். சனியின் வக்ர இயக்கம் ஜூன் 17, 2023 முதல் தொடங்கும். 

 

சனி பகவான் வக்ர நிலைக்கு வந்தவுடன் முக்கோண ராஜயோகம் உருவாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த யோகம் பல ராசிகளின் அதிர்ஷ்டத்தை மாற்றும். மறுபுறம் சிலருக்கு கஷ்டங்களைத் தரும். ஒரு சில ராசிக்கு பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும், சிலருக்கு தவறுகள் நடந்துக்கொண்டே இருக்கும். எனவே எந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை அமையும், எந்த ராசிக்கு கஷ்டங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

1 /8

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி நல்ல பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் செல்வம் உயரும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.  

2 /8

ரிஷப ராசி: வக்ர சனியின் காரணமாக உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்த நேரத்தில், விரும்பிய வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  

3 /8

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பொழிவார், இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தடைபட்ட பணிகள் முடிவடையும்.  

4 /8

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதலீடு செய்வதை தவிர்க்கவும்.  

5 /8

சிம்ம ராசி: இந்த நேரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. தடைபட்ட உங்களது பணிகளும் எளிதாக நிறைவேறும்.  

6 /8

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்கள் மன உளைச்சலை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படலாம். கடன் வாங்குவதை தவிக்கவும்.  

7 /8

மகர ராசி: பேச்சில் நிதானம் தேவை. கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தாயின் உடல்நிலை குறித்து நீங்கள் கொஞ்சம் கவலைப்படலாம். மனைவியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம்.  

8 /8

கும்ப ராசி: உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வாழ்கையில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.