Side effects of Green Tea: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாலிபினாக்கள் நிறைந்த கிரீன் டீ, உடன் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
1/8Side effects of Green Tea: தற்போது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், பலர் காபி டீக்கு பதிலாக கிரீன் டீ எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். கிரீட்டில் ஆயுர்வேத குணங்கள் நிறைந்திருப்பதன் காரணமாக, இது சிறந்த ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது.
2/8உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு கிரீன் டீ சிறந்த தீர்வாக உள்ளது. ஏனெனில் இதில் உள்ள பாலிசி நூல்கள் வளர்ச்சி மாற்றத்தை அதிகரிப்பதோடு, மிகக் குறைந்த கலோரிகள் கொண்டது. எனவே, தொப்பையை குறைக்கும் சிறந்த பானமாக கருதப்படுகிறது.
3/8கிரீன் டீயின் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கும் உணவுகள் நிபுணர்கள், நாளொன்றுக்கு இரண்டு கப் கிரீன் டீக்கு மேல் அதிகம் அருந்துவதால், உடல்நல பாதிப்புகள் வரும் என்று எச்சரிக்கின்றனர்.
4/8செரிமான பிரச்சனை: நாளொன்றுக்கு இரண்டு கப் என்று அளவிற்கு அதிகமாக கிரீன் டீ எடுத்துக் கொள்வது, செரிமான பிரச்சனைகளை உண்டாக்கி, அஜீரணம், வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். சில சமயங்களில் மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்று பக்க விளைவுகளும் உண்டாகலாம்.
5/8உடல் பலவீனம்: அளவிற்கு அதிகமான கிரீன் டீ குடிப்பதால், சில சமயங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு உண்டாக்கலாம். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அதிக அளவிலான சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். எனவே எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
6/8சரும ஆரோக்கியம்: அளவிற்கு அதிகமான கிரீன் டீ சரும ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். இதனால் சருமத்தில் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
7/8தினமும் 2 கப் கிரீன் டீக்கு மேல் குடித்தால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திற்கு 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்ற நிலையில், தூக்கமின்மை பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
8/8பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.