சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வடிகட்டுவதன் மூலமும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதன் மூலமும் நமது உடல் அமைப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, இரத்தத்தில் இந்த கழிவுகள் அதிகமாக சேர்வதால் உடல் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, மற்ற உறுப்புகளுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இது பைலோனெப்ரிடிஸ் போன்ற தொற்றுநோய்களாலும் ஏற்படலாம். இந்நிலையில், சிறுநீரக பாதிப்பு ஆரம்ப கால 5 அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, இரத்தத்தில் இந்த கழிவுகள் அதிகமாக சேர்வதால் உடல் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இது மற்ற உறுப்புகளுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், சிறுநீரக பாதிப்பு ஆரம்ப கால 5 அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் காணப்படும் வீக்கம் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாகும். எடிமா என்றும் அழைக்கப்படும் இந்த நிலை சிறுநீரகங்கள் கழிவு பொருட்கள் மற்றும் இரத்தத்தில் இருந்து அதிகப்படியான திரவத்தை வடிகட்ட சரியாக வேலை செய்யவில்லை என்பதை காட்டுகிறது.
இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை, நோக்டூரியா என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறியாகும். சிறுநீரக செயல்பாடு குறைதல், திரவம் தக்க வைத்தல் மற்றும் சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இது ஏற்படுகிறது.
உங்கள் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகவில்லை என்றும், மீண்டும் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றும் நீங்கள் உணர்ந்ததால், இரவில் நல்ல தூக்கத்தை அனுபவிக்க முடியாமல் போகும். இந்த அறிகுறி இருந்தால், உங்கள் சிறுநீரகத்தை பரிசோதிக்க வேண்டும்.
தூங்கும் போது சிறுநீர் கசிவு இருந்தால், அது சிறுநீரகப் பாதிப்பின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி. சிறுநீரகங்கள் முக்கியமாக உடலில் இருந்து நச்சுகளை சிறுநீர் வடிவில் வெளியேற்ற உதவுகின்றன. அது நடக்காதபோது, உடலில் திரவங்கள் குவிந்து, சிறுநீர்ப்பை சரியாகச் செயல்படாது. இதனால் நீங்கள் தூங்கும் போதும் சிறுநீர் கழிக்கலாம்.
உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது தோன்றும் ஒரு எச்சரிக்கை அறிகுறி இரவில் சரியாக தூங்க முடியாமல் போவது. தூக்கமில்லாத இரவுகள் வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படலாம். எனினும், மேற் கூறிய அறிகுறிகளோடு தூக்கமின்மையும் இருந்தால், உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்வது முக்கியம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.