வெள்ளித்திரையில் மின்னும் எஞ்சினியர்கள்! இவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள்

Engineer Day: பாலிவுட் நட்சத்திரங்களாக மின்னும் சில நட்சத்திரங்கள் பொறியியல் பட்டதாரிகள்... 

தொழில்நுட்ப கல்வி படித்திருந்தாலும், தொழில் வாழ்க்கையை திரைப்படத்துறைக்கு மாற்றிக் கொண்ட நடிக நடிகைகள் யார் யார் என்று தெரியுமா?

மேலும் படிக்க | சமூக ஊடகங்களில் கோலோச்சும் இந்திய கிரிக்கெட் ராஜாக்கள்

1 /7

பாலிவுட் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்தவர் நடிகர் விக்கி கௌஷல். . . விக்கி கௌஷல் 2009 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பட்டம் பெற்றார். பின்னர், அவர் நடிப்புத் துறையில் நுழைந்தார்.

2 /7

பாலிவுட் நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ரித்தேஷ் விலாஸ்ராவ் தேஷ்முக், நகைச்சுவை மற்றும் தீவிரமான பாத்திரங்களில் கலக்குபவர். மும்பையில் உள்ள கமலா ரஹேஜா கட்டிடக்கலை கல்லூரியில், கட்டிடக்கலை பொறியியலில் பட்டம் பெற்றார்.

3 /7

நடிகர் சோனு சூத், கொரோனா தொற்றுநோய் பரவலின்போது, ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி பிரபலமானவர். பொறியியல் பட்டதாரியான  சோனு சூத், நாக்பூரில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர்.

4 /7

நடிகர் ஆர். மாதவன் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் பொறியாளராகவும் இருக்கிறார். கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்த எஞ்சினியர் மாதவன்.

5 /7

பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு, நடிகை டாப்ஸி பண்ணு, புது டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி அறிவியல் பொறியியல் பட்டம் பெற்றார். படித்துவிட்டு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து மாடலிங் துறையில் நுழைந்தார்.

6 /7

கார்த்திக் ஆர்யன், இன்று பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். பாட்டீல் பொறியியல் கல்லூரியில் பயோடெக்னாலஜியில் பட்டம் பெற்ற அவர், கல்லூரி நாட்களிலிருந்தே சினிமாவில் நடிப்பதை லட்சியமாக வைத்திருந்தார்...

7 /7

நடிகை கிருத்தி சனோன் தற்போது தனது கேரியரின் உச்சத்தில் இருக்கிறார். பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கிருத்தி,2014 இல் ஹீரோபந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நொய்டாவிலுள்ள ஜேபி இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் தனது இளங்கலை தொழில்நுட்ப கல்வி பயின்றார் கிருத்தி...