Favourite Zodiac Signs Of Lord Shiva: சிவபெருமானை வணங்குவதற்கும் அவரின் அருளை பெறுவதற்குமே அவருடைய ஆசி இருந்தால் தான் முடியும். அதனால் தான் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அப்பேர்ப்பட்ட சிவபெருமானின் அருளை பெற்றுள்ள ராசிகள் குறித்து ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவ அருளைப் பெற சிந்தையிலும் செயலிலும் சிவனையே நினைத்து ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். இந்நிலையில், ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் பரிபூரணமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Favourite Zodiac Signs Of Lord Shiva: திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை முறையாக வழிபட்டால் வாழ்வின் ஒவ்வொரு அனைத்து நெருக்கடிகளும் தீரும். எனினும், சிலருக்கு எப்போதுமே சிவனின் அருள் கிடைக்குமாம். ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் பரிபூரணமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 4 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேஷம் - ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகம் சிவனின் பாகமாக கருதப்படுகிறது. அவர்களின் அருளால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவார்கள் என்பது நம்பிக்கை. மேஷ ராசிக்காரர்கள் திங்கட்கிழமையன்று சிவபெருமானை முறைப்படி வழிபட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் வாழ்வில் ஏற்பட்ட தொல்லைகள் விலகும் என்பது நம்பிக்கை.
விருச்சிகம் - ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். மேலும், அதனால், இந்த ராசிக்காரர்களுக்கும் சிவபெருமானின் சிறப்பு அருள் உள்ளது. இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், அவர் அருளால், அனைத்து கஷ்டங்களும் தீரும் என்பது நம்பிக்கை. இது தவிர, எல்லாவிதமான பயத்திலிருந்தும் விடுதலை பெறலாம்.
மகரம் - மகர ராசி சிவனுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் ஒன்றாகும். இந்த ராசியின் அதிபதி சிவபெருமானின் பிரியமான பக்தரான சனி தேவன் ஆவார். எனவே, மகர ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் சிறப்பு அருள் உள்ளது. இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமையன்று சிவலிங்கத்திற்கு வில்வம், கங்கை நீர், பசும்பால் ஆகியவற்றை அபிஷேகம் செய்து வழிபட்டால், அனைத்து கஷ்டங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
கும்பம்- கும்பத்தின் அதிபதி சனி பகவான் என்றும் கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் ஆசியுடன் சிவபெருமானின் அருளும் கிடைப்பதற்கு இதுவே காரணம். கும்ப ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபட்டால் வாழ்க்கையின் நெருக்கடியில் இருந்து பரிபூரணமாக விடுபடலாம் என்பது ஐதீகம். கும்ப ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு திங்கட்கிழமைகளில் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
பங்குனி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தில் சதுர்த்தசியில் கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி மட்டுமே பலருக்கு தெரியும், ஆனால் மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷத்தில் சதுர்தசி அன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பக்ஷ சதுர்தசியில் விரதமிருந்து, வில்வ இலைகளால் சிவபெருமானை வணங்கி, இரவு முழுவதும் விழித்திருப்பவரை, சிவபெருமான் நரக வேதனைகளிலிருந்தும் காத்து, மகிழ்ச்சியையும் முக்தியையும் தருகிறார் என்பது ஐதீகம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.