உதயமாகும் சனி இந்த ராசிகளை ஓஹோன்னு வாழ வைப்பார்: உங்க ராசி என்ன?

Shani Uday in March: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் கிரக மற்றும் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி பெயர்ச்சியானார். அவர் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். மார்ச் மாதம் சனி உதயமாகிறார். 

1 /6

சனியின் உதயம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், மூன்று ராசிக்காரர்களுக்கு இது அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும். சனியின் அருளால் இந்த காலத்தில் திருமணமாகாத பலருக்கு திருமணம் நிச்சயமாகலாம். 

2 /6

மார்ச் மாத தொடக்கத்திலேயே சனிபகவான் கும்ப ராசியில் உதயமாகி, ஷஷ மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்குவார். இந்த செல்வ யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு பொருளாதார மகிழ்ச்சியை அள்ளித்தரும்.   

3 /6

கும்ப ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் சனி ஷஷ ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகி நடக்கும். 

4 /6

சிம்ம ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 7ம் வீட்டில் சஷ் மஹாபுருஷ ராஜ யோகம் உருவாகிறது. இதனால் வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். இதனுடன் இந்த காலத்தில் கூட்டுத்தொழில் செய்தால் அதிகப்படியான லாபம் காணலாம். 

5 /6

தொழில் ரீதியாக இந்த காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும். உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.   

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை