குரு பெயர்ச்சி 2023: 5 ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம், தொட்டது துலங்கும்!!

Guru Peyarchi 2023: குரு பகவானின் பெயர்ச்சி கஜலக்ஷ்மி யோகத்தை உருவாக்க உள்ளது. இந்த யோகத்தில் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தோஷங்களும் குறைந்து பல நன்மைகள் கிடைக்கும். இந்த யோகத்தால் மிக அதிக நன்மைகளை பெறப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்த சிறப்பு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

1 /5

ஜோதிட சாஸ்திரப்படி, குரு மேஷ ராசியில் கோச்சாரம் செய்வது இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். இந்த காலத்தில் ராசிக்கு முதல் வீட்டில் ராகு, சூரியன், குரு, புதன் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த அரிய சேர்க்கை இந்த ராசிக்காரர்களை செல்வந்தர்களாக மாற்றும். 

2 /5

மிதுன ராசியில் ராகு, சூரியன், புதன், வியாழன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கும். இந்த ராசிக்கு 11ம் வீட்டில் இந்தக் கூட்டணி நடக்கப் போகிறது. இதுமட்டுமின்றி இந்த காலத்தில் பலருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதனுடன், இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். 

3 /5

ஜோதிட சாஸ்திரப்படி இந்த யோகம் நான்காம் இடமான மகர ராசியில் அமையப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், மகர ராசிக்காரர்கள் பணபலமும், மன வலிமையும் பெறுவார்கள். வாகனம், நிலம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உருவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

4 /5

இந்த கிரகங்களின் சேர்க்கை சிம்மத்தின் ஒன்பதாம் வீட்டில் நடக்கப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு துறையிலும் வெற்றியுடன், நீங்கள் முன்னேற்றத்தையும் அடைவீர்கள். இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். 

5 /5

ஜோதிடத்தின் படி, இந்த கிரகங்களின் கூட்டணி மீனத்தின் இரண்டாம் வீட்டில் உருவாகப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், மீன ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழிலில் பல புதிய முடிவுகளை எடுப்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள்.

You May Like

Sponsored by Taboola