ஜூலை மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்: உங்க ராசியும் இதுவா

ஜூலை மாத ராசிபலன் 2022: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜூலை மாதத்திலும் 5 பெரிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் மிதுன ராசியில் நுழைகிறது. இதைத் தொடர்ந்து சூரிய பகவான் ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனுடன் செவ்வாய் மற்றும் சுக்கிரனும் ஜூலை மாதத்தில் மாறுவார்கள். கிரகங்களின் நிலை மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களும், அபரிமிதமான லாபமும் கிடைக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம். 

1 /4

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தொழிலில் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திடீர் பண ஆதாயங்கள் ஏற்படும். நீங்கள் சில பெரிய பொறுப்புகளை பெறலாம். குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கும்.

2 /4

ஜூலை மாதத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சிம்ம ராசிக்காரர்களின் வேலைகள் நடந்து முடியும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். புதிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். உத்தியோகத்தில் புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். வேலையில் மேன்மையான செய்திகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 

3 /4

தனுசு ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் நிதிப் பலன்களைப் பெறலாம். இந்த நேரத்தில், எதிர்பாராத இடங்களில் இருந்து பண ஆதாயங்களை பெறுவீர்கள். வருமானம் பெருகும், பணம் சம்பாதிக்கும் வழிகள் திறக்கப்படும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களை அளிக்கும். சொத்து தகராறில் உங்களுக்கு சாதகமாக முடிவு வரும்.

4 /4

ஜூலை மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் நிலை சாதகமாக இல்லை. எனவே இந்த ராசிக்கார்ரகள் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நோய்கள் வரலாம். பொறுமையாய் இருங்கள். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.