Mars: செவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள்! இது சீனாவின் ஆர்பிட்டர் செல்ஃபி!

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகிற்கு புத்தாண்டு வாழ்த்துகளை வித்தியாசமாக தெரிவித்துள்ளது சீனா. சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) தியான்வென்-1 ஆய்வு மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை அந்நாடு பகிர்ந்துள்ளது.

ரிலே தகவல்தொடர்பு செயற்கைக்கோளாக செயல்படும் மிஷன் ஆர்பிட்டர், சுமார் 526 நாட்களாக சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது. இது பூமியில் இருந்து சுமார் 3.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மூலம், மொத்தம் 560 ஜிபி மூல அறிவியல் தரவுகள் கிடைத்துள்ளன.  

CNSA இன் படி, பூமியிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வின் வெளிப்புறச் சுவரில் இரண்டு வைட்-ஆங்கிள் லென்ஸ்கள் பொருத்தப்பட்ட பிரிக்கக்கூடிய சென்சார் உதவியுடன் ஆர்பிட்டர் செல்ஃபியும் எடுத்தது.
(Pic Courtesy: CNSA)  

1 /4

செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் போது ஆர்பிட்டர் காணப்படுகிறது. (Pic Courtesy: CNSA)

2 /4

ஆர்பிட்டரின் நெருக்கமான காட்சியைக் காட்டும் படம். (Pic Courtesy: CNSA)   

3 /4

செவ்வாய் கிரகத்தின் வடக்கு துருவ பனிக்கட்டியை இந்தப் படத்தில் காணலாம். (Pic Courtesy: CNSA) 

4 /4

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு. (Pic Courtesy: CNSA)