வீட்டில் இருந்தே விண்ணப்பித்தால் 7 நாளில் பாஸ்போர்ட் வீட்டில் டெலிவரி

Passport in 7 Days: அலைச்சல் இல்லாமல் வீட்டிலிருந்து கொண்டே ஏழே நாட்களில் பாஸ்போர்ட் பெறலாம் தெரியுமா? ஆன்லைனில் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்குள் கடவுசீட்டைப் பெறுங்கள். 

வீட்டில் இருந்தபடியே பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கான எளிய வழிமுறையைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.  

1 /9

வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியம் ஆகும். இந்தியாவில் பாஸ்போர்ட் பெறும் கடினமான நடைமுறைகள் தற்போது மேலும் எளிதாகிவிட்டன.  

2 /9

பாஸ்போர்ட் அவசரமாக தேவைப்படும் சந்தர்ப்பங்களில், உடனடியாக கடவுச்சீட்டை பெறும் வழிமுறைகளும் வந்துவிட்டன. ஏழே நாட்களில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி? தெரிந்துக் கொள்ளுங்கள்

3 /9

பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் உள்நுழைந்து, 'Apply For New Passport' என்ற இணைப்பைக் கிளிக் செய்தபிறகு, உடனடி பயன்முறையை (Immediate Mode) தேர்ந்தெடுக்கவும்   

4 /9

விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் சரியாக நிரப்பவும். முகவரியை சரியாக நிரப்பவும், வீட்டு முகவரியை சரிபார்க்க நேரில் அதிகாரிகள் வருவார்கள்

5 /9

பதிவேற்றம் முடிந்ததும், பாஸ்போர்ட் சேவா மையத்தில் (PSK) தனிப்பட்ட நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தை பதிவு செய்ய, "Pay and Schedule Appointment" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

6 /9

தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா மையத்தில் நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துவிட்டு, ஆன்லைன் கட்டணப் பக்கத்திற்கு செல்லுங்கள்

7 /9

கட்டணம் செலுத்தி முடிந்ததும், விண்ணப்பக் குறிப்பு எண் (ARN) அல்லது அப்பாயிண்ட்மென்ட் எண் அடங்கிய விண்ணப்ப ரசீதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

8 /9

பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்குச் செல்லும்போது, உங்களிடம் அனைத்து அசல் ஆவணங்களும் இருப்பது முக்கியம். பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது பூர்த்தி செய்யப்பட்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் பாஸ்போர்ட் அனுப்பப்படும். 

9 /9

சாதாரண பாஸ்போர்ட்டுக்கான செயலாக்க நேரம் 30 முதல் 45 நாட்கள் ஆகும். தட்கல் முறையில் செய்யப்படும் விண்ணப்பங்கள் 7 முதல் 14 நாட்கள் ஆகும். இந்தியா போஸ்ட்டின் ஸ்பீட் போஸ்ட் போர்ட்டலில் உள்ள கண்காணிப்பு செயலியை பார்த்து டெலிவரி நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.