7th Pay Commission: இந்த மாதம் ஊழியர்களுக்கு கிடைக்கும் DA, TA, PF, Gratuity-ல் பம்பர் அதிகரிப்பு

7th Pay Commission: 2021 ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை நிவாரணம் வரக்கூடும். ஏனெனில் இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மீட்டமைக்கப்பட்டவுடன், 7 வது சிபிசி ஃபிட்மண்ட் ஃபாக்டர் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் பெரும் உயர்வுக்கு வழி பிறக்கும்.

ஏனெனில் தற்போதுள்ள 17 சதவீத DA, 28 சதவீதமாக (17 + 3 + 4 + 4) அதிகரிக்கும். இந்த டிஏ கணக்கீடு 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு எதிர்பார்க்கப்படும் 4 சதவீத டிஏ மற்றும் ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை அறிவிக்கப்பட்ட 4 சதவீத டிஏ மற்றும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தின் 3 சதவீத டிஏ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், 2.57 சதவிகித 7 வது ஊதியக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும். 

1 /5

7 வது ஊதியக்குழு ஊதிய மேட்ரிக்ஸ் விதிப்படி, ஒரு மத்திய அரசு ஊழியரின் மாத சம்பளம் அடிப்படை ஊதியத்தைப் பொறுத்தது. ஒரு மத்திய அரசு ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ .21,000 ஆக இருந்தால், அவரது மாத ஊதியம் ரூ .53,970 (ரூ. 21,000 X 2.57) ஆக இருக்கும். Photo: Reuters

2 /5

இது தவிர, DA, HRA, TA, மருத்துவ கொடுப்பனவு போன்ற பல்வேறு 7 வது ஊதிய கமிஷன் சலுகைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் தகுதியுடையவர்களாக உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய டிஏ 17 சதவீதமாக உள்ளது. அதாவது ஊழியர்களின் தற்போதைய டி.ஏ. அவர்களது அடிப்படை சம்பளத்தில் 17 சதவீதமாகும். மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ .21,000 ஆக இருந்தால், DA ரூ 3,570 ஆக இருக்கும். DA 28 சதவீதமாக மாறும் போது, ​​DA அளவு ரூ .5,880 ஆக மாறும். Photo: Reuters  

3 /5

அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டால், ஊழியர்களின் PF இருப்பும் கணிசமாக அதிகரிக்கும். 7 வது ஊதிய கமிஷன் கட்டண விதிகளின்படி, மத்திய அரசின் PF பங்களிப்பு அடிப்படை சம்பளம் மற்றும் DA-வின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எனவே, DA முடக்கம் நீக்கப்பட்ட பிறகு, ஊழியர்களின் PF பங்களிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பி.எஃப் இருப்பு என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கான மிகவும் பொதுவான ஓய்வூதிய நிதி திரட்டும் கருவிகளில் ஒன்றாகும். அகவிலைப்படி முடக்கம் கண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளிக்கப்போகிறது. Photo: Reuters  

4 /5

அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டவுடன், PF போலவே, மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர கிராஜுவிட்டி பங்களிப்பும் மாற்றப்படும். 7 வது சிபிசி விதிப்படி, ஒருவரின் கிராஜுவிட்டி பங்களிப்பு அவரது அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜூலை 2021 முதல் டிஏ மாறும் என்பதால், மாதாந்திர கிராஜுவிட்டி பங்களிப்பும் மாறும். Photo: Reuters

5 /5

மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி நேரடியாக டி.ஏ.யுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜூலை 2021 முதல் டிஏ தானாக டிஏவுடன் ஒத்திசைவாக உயரும். எனவே, DA முடக்கம் நீக்கப்பட்டால், அது DA, TA என இரண்டும் அதே சதவீதத்துடன் உயர வழிவகுக்கும். Photo: Reuters