கொரோனா காலத்தில், மத்திய அரசு ஒருபுறம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தி ஒரு பெரிய அடியைக் கொடுத்தது. அதே நேரத்தில், பண்டிகைக்கு முன்னர் பல நிதி உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய ஊழியர்களின் விடுப்பு பயண கொடுப்பனவை (LTA) அரசாங்கம் இரண்டு ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.
இதில் மத்திய அரசு ஊழியர்கள் 2022 க்குள் வடகிழக்கு, லடாக், அந்தமான்-நிக்கோபார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளுக்கு பயணிக்க தங்கள் விடுப்பு பயண கொடுப்பனவை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஊழியர்களுக்கு விடுப்பு பயண கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதில், ஊழியர்கள் வெளி ஊர்களுக்கு சென்றால் பயண உதவித்தொகையை கோரலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. ஹோலி பண்டிகை இவர்களுக்கு நல்ல செய்தியை கொண்டுவரப் போகிறது. ஏனெனில் சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தின் கீழ் (Special Festival Advance Scheme) அரசாங்கம் உதவி வழங்கி வருகிறது.
7 வது ஊதியக்குழுவின் பரிந்துரை நடைமுறைக்கு வந்தபோது, அந்த நேரத்தில் இந்த முன்பணத்திற்கான எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை. முன்னதாக, ஆறாவது ஊதியக்குழுவில் 4500 ரூபாய் கிடைத்தது. ஆனால் இம்முறை இந்திய அரசு முன்பண திட்டத்தில் ரூ .10,000 ஒதுக்கீடு செய்துள்ளது. பண்டிகைகளின் போது மத்திய அரசு ஊழியர்கள் ரூ .10,000 முன்பணம் பெறலாம்.
இந்த முன்பணத்திற்கு எந்த வட்டியும் வசூலிக்கப்படாது. இதை பெறுவதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2021 ஆகும். பண்டிகைகளுக்காக அளிக்கப்படும் முன்பணம் ப்ரீ லோடடாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்னர் கூறினார். இந்த பணம் முன்னதாகவே மத்திய ஊழியர்களின் ஏடிஎம்களில் வரவு வைக்கப்பட்டிருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த 10,000 ரூபாய்க்கு வரி வசூலிக்கப்படாது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதை திருப்பிச் செலுத்தும்போது எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், இந்த தொகையை 10 தவணைகளில் திருப்பித் தந்தால் போதும். அதாவது, வெறும் 1000 ரூபாய் என்ற மாதத் தவணையில் இதை திருப்பி செலுத்தலாம்.
பண்டிகைக் கால முன்பண திட்டத்தின் கீழ் சுமார் 4000 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று மதிப்பிடப்பட்டதாக நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மாநில அரசுகளும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால், சுமார் 8,000 கோடி ரூபாய் செலவிடப்படும். முன்பண திட்டத்தின் வங்கி கட்டணத்தையும் அரசாங்கம் ஏற்கும் என்று அனுராக் தாக்கூர் கூறினார். ஊழியர்கள் இந்த முன்பணத்தை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலவிட முடியும்.