இந்தியன் பிரிமியர் லீக்கின் முக்கிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் IPL 2021-க்கான தங்களது பயிற்சியைத் தொடக்கியுள்ளன. எனினும், கோவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் காரணமாக எந்தவொரு அணியும் தங்கள் ஹோம் கிரவுண்டில் ஆடாது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் IPL 2021 தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) விளையாடும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி காப்பிடல்ஸ் அணிக்கு எதிராக, சனிக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறும் போட்டியில் இந்த ஆண்டின் தனது ஆட்டத்தைத் துவக்கும். தங்கள் முதல் போட்டிகளின் அதிரடியாக களமிறங்க இரு அணிகளும் முழு அளவிலான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
மும்பையில் நடைபெற்ற பயிற்சியில், சென்னை ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் உரையாடலில் ஈடுபட்டுள்ளார். IPL வரலாற்றில் முதல்முறையாக 2020 ஆம் ஆண்டில் CSK பிளேஆஃப்களுக்கு தகுதி பெற தவறிவிட்டது. (Photo: Twitter / Chennai Super Kings)
மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சென்னையில் வலைப் பயிற்சியில் பந்து வீசுகிறார். பும்ராவுக்கு சமீபத்தில் விளையாட்டு தொகுப்பாளரான சஞ்சனா கணேசனுடன் திருமணம் நடந்தது. தேனிலவுக்குப் பிறகு திரும்பிய பும்ரா கடந்த வாரம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சேர்ந்தார். (Photo: Mumbai Indians)
மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் சென்னையில் பயிற்சி அமர்வுக்குப் பிறகு தவல் குல்கர்னியுடன் காணப்பட்டார். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் ஐபிஎல் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸால் கடந்த மாதம் நடந்த ஏலத்தில் ரூ .20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.(Photo: Mumbai Indians)
மும்பையில் நடந்த பயிற்சி அமர்வில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியின் சக வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் சேதேஷ்வர் புஜாராவுடன் காணப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விரல் முறிந்த நிலையில் காயப்பட்ட ஜடேஜா தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். (Photo: Chennai Super Kings)
மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் சென்னையில் உள்ள ஜிம்மில் பயிற்சி பெறுகிறார். கிஷன் கடந்த சீசனில் 14 ஆட்டங்களில் 145 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 516 ரன்கள் எடுத்தார். (Photo: Mumbai Indians)