Diwali: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் ராணுவ வீரர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார்

2014ம் ஆண்டு பதவி ஏற்றதிலிருந்து ஆண்டுதோறும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. எட்டாவது ஆண்டாக எல்லைப் பகுதியில் நாட்டை காக்கும் வீரர்களுடன் தீப ஒளித் திருநாளை கொண்டாடும் பிரதமர் மோடியின் புகைப்படத் தொகுப்பு...

Also Read | தீபாவளியில் அண்ணாத்த ரஜினியின் தாண்டவம்

1 /6

இந்தியாவின் எல்லைப் பகுதியில் வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்தார் பிரதமர்

2 /6

வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி, அவர்களுக்கு இனிப்பு வழங்கியதோடு, ஊட்டிவிட்டு, உற்சாகப்படுத்தினார் பிரதமர்

3 /6

ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷோரி செக்டாப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பிரதமர் மோடி 2021ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்

4 /6

நவ்ஷேராவுக்கு வந்த பிரதமர் மோடியை ராணுவத் தளபதி எம்எம் நரவானே வரவேற்றார்

5 /6

எல்லைப்  பகுதியில் உள்ள நிலவரங்கள் தொடர்பாக ராணுவத் தலைவருடன் பிரதமர் உரையாடினார்

6 /6

பாதுகாப்புப்பணிகள் மற்றும் எல்லையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கு நரவானே விளக்கினார்