விஜயகாந்தின் கையில் இருக்கும் தேமுதிக கொடி பதித்த மோதிரத்துடனே அவர் அடக்கம் செய்யப்பட்டார் எனவும் அவருக்கு மெரினாவில் மணிமண்டம்பம் எழுப்பப்படும் எனவும் கூறினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நல்லடக்கத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்தார்.
பொதுப்பணித்துறைக்கு எ.வ.வேலு உள்ளிட்டோருக்கும் சென்னை மாநகராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், காவல்துறையினருக்கு ராயல் சல்யூட் அளிப்பதாக பிரேமலதா கூறினார்.
15 லட்சம் பேர் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக கூறிய பிரேமலதா, ராகுல் காந்தி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தார் எனவும் தகவல் அளித்தார்.
விஜயகாந்தின் கையில் இருக்கும் தேமுதிக கொடி பதித்த மோதிரத்துடனே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறினார். மெரினாவில் மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.
முன்னதாக, விஜயகாந்தின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு, தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மொத்தம் 72 குண்டுகள் முழங்க துப்பாக்கி குண்டுகள் வானத்தை நோக்கி சுடப்பட்டு விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
தீவுத்திடலின் இன்று காலை வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் சுமார் 2.30 மணிநேரம் ஊர்வலத்திற்கு பின் கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்பட்டது.